Saturday, April 9, 2011

பார்லி ( வாற்கோதுமை )‏

பார்லி வயல்பார்லி (Hordeum vulgare) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.

***


வரலாறு:


பயிரிடப்படும் பார்லி தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின பார்லியிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை பார்லி தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன.


*

பயிரடப்படும் பார்லிக்கும் காட்டின பார்லிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின பார்லியின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது.

*

பார்லி பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாச்சர எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட பார்லியின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. பார்லியும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது.

*

பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் பார்லிக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், பார்லி மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "பார்லித்தாய்" என்றும் அழைக்கப்பட்டார்.

*

பார்லி மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் (malt) நுண்ணுயிர் பகுப்பு (fermentation) மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது.


***


பார்லி இரகங்கள்:


பயிரிடப்படும் பார்லி இரகங்களை முன்பனிக்கால வகைகள், வசந்தகால வகைகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுடன் கரடி என்றழைக்கப்படும் ஒரு மூலமறியப்படாத இரகத்தையும் சேர்க்கலாம். இந்த இரகம் மற்ற இரு இரகங்கள் அளவே மகசூல் கொடுப்பினும் குறைவான குண நலங்களே பெற்றுள்ளது.

*

முன்பனிக்கால இரகம் கோதுமை போலவும், வசந்த கால இரகம் ஓட் போலவும் பயிரிடப்படுகின்றன. பிரிட்டனில் முன் கால்த்தில் பார்லி கோடைத்தரிசு நிலங்களில் பல்வேறு பெயர்களுடன் பயிரடப் பட்டு வந்தது.

*

வசந்தகால பார்லி பயிரிட சிறந்த பருவம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களாகும் (பின் மாசி முதல் முன் சித்திரை வரை). இருப்பினும், மிகத்தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களும் நல்ல மகசூல் தந்துள்ளன.

*

பார்லி சிற்றினங்கள் பூங்கொத்தின் மணி வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பிரிக்கப் பட்டுள்ளன. இரு வரிசை பார்லி (Hordeum distichum), நால் வரிசை பார்லி (Hordeum tetrastichum) மற்றும் அறு வரிசை பார்லி (Hordeum vulgare) என இவை தொன்றுதொட்டு அறியப்பட்டுள்ளன.

*

இவ்வெல்லா சிற்றினஙளிலும் பாதி எண்ணிக்கை மல்ர்களே விருத்தி செய்யும் தகுதி படைத்தவையாய் உள்ளன. தற்கால பார்லி பெரும்பாலும் Hordeum vulgare சிற்றினமாகும்.

*

இவற்றுள் இரு வரிசை பார்லி மிகப் பழமையானது; காட்டின பார்லி வகைகள் இருவரிசை பார்லியாகவே காணப்படுகின்றன. இரு வரிசை பார்லி அறுவரிசை பார்லியை விடக் குறைவான புரதமும், அதிக உருமாற்றப்புரதக்காரணியும் (enzyme) கொண்டுள்ளது.

*

அறுவரிசை பார்லி தீவனமாகவும், பிற பொருள் கலந்த முளைக்கூழ் உருவாக்கவும் உகந்ததாகும். இரு வரிசை பார்லி தூய முளைக்கூழ் உருவாக்க உகந்ததாகும். நால் வரிசை பார்லி நுண்ணுயிர் பகுப்புக்கு உகந்ததல்ல.

*

மேலும், தீட்டப்பட வேண்டிய (கூடுள்ள) மற்றும் கூடற்ற பார்லி எனவும் பார்லியை வகைப்படுத்தலாம். இவற்றுள் கூடுள்ள வகைகள் தொன்மையானவை.

***


பயன்கள்:

1. பார்லி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான உணவு தானியமாகும்.

*

2. பார்லி உவர்மண்ணில் கோதுமையைக் காட்டிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது.

*

3. இதனாலேயே கி.மு இரண்டாயிரத்தில் மெசபடோமியாவில் பார்லி பயிரிடுதல் அதிகரித்திருக்கலாம்.

*

4. அதே போல ரை பயிரைக்கட்டிலும் அதிக குளிர் தாங்கும் சக்தியும் பார்லிக்கு உண்டு.

*

5. பார்லி முளைக்கூழ் பியர் மற்றும் விஸ்கி தயாரிப்பில் ஒரு முக்கிய இடுபொருளாகும்.

**


இதன் மருத்துவ குணங்கள் பிறகு பதிவு இடுகிறேன்!

***
thanks விக்கிபீடியா

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment