கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.
*
கறிவேப்பிலை மணம் வீசாத தென்னிந்திய சமையலறையைக் காண்பது மிகவும் கடினம். பச்சை இலைகள் சிறிது கச்சாப்பாக்இருந்தாலும்,எண்ணையில் போட்டு தாளிக்கும் பொழுது அருமையாக மணக்கும். இந்த இலைகளை நாம் வெறும் வாசத்திற்கு மட்டும் தாளிப்பில் சேர்த்து விட்டு, சாப்பிடும் பொழுது ஒதுக்கி விடுகிறோம்.
*
ஆனால், கண்டிப்பாக நாம் இவற்றை உணவோடுச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.
***
சத்துக்கள்:
கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி-2, சி மற்றும் தாதுப்பொருட்கள் நிறைய இருக்கன்றன.
*
சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.
*
இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.
*
நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். மேலும், இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது
***
மருத்துவ குணங்கள்:
சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
*
சளி காரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அந்தக் காய்ச்சலை கறிவேப்பிலை இறக்கிவிடும். கறிவேப்பிலையுடன் சிறிதளவு சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி சாப்பிட்டு பின் வெண்ணீர் குடித்தால் போதும் விரைவிலேயே காய்ச்சல் குறைந்துவிடும்.
*
இதுமட்டுமா? சீதபேதியையும் கறிவேப்பிலை நிறுத்தும். கறிவேப்பிலையை நன்கு சுத்தம் அரைத்து எலுமிச்சம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும் எப்படிப்பட்ட சீதபேதியும் நின்று விடும்.
*
மேலும், குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்ற பிரச்சனைகளையும் இது சரிசெய்யும். இதுதவிர, கறிவேப்பிலையுடன் சீரகம், புளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து துவையலாக சாப்பிட்டால், நாக்கு ருசியற்ற தன்மையிலிருந்து மாறி இயல்பான நிலைக்குத் திரும்பும்.
*
அகத்திக்கீரைக்கு அடுத்து கறிவேப்பிலையில்தான் அதிக சுண்ணாம்புச் சத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு தலை முடி நரைப்பதில்லை. ஏனென்றால் முடி கருமையாக இருக்கவும், நரையைத் தடுக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.
*
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
*
இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு
*
கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.
*
பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
*
வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
*
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
*
கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.
*
அரோசிகம் எடுபடஎந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.
*
கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.
*
முடி - கண் - வயிறு - நரம்பு - மூளை இவற்றிற்கு இன்றியமையாதது கறிவேப்பிலை. கறிவேப்பிலையினை வெயிலில் கருகச் செய்து தேங்காய் எண்ணெயுடன் பொடி செய்து கலந்து தேய்த்து வர இளம் நரை விலகும். கறிவேப்பிலை சாற்றினை பசும் பாலுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலமும் நரை முடி வராமல் தடுக்கலாம்.
*
தினமும் கறிவேப்பிலையினை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது.பசியினைத் தூண்டி, செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படாது தடுப்பதில் கறிவேப்பிலைக்குத் தனிபங்கு உண்டு.
*
கறிவேப்பிலை பொடியினை நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்றில் வாய்வு சேராது. மலச்சிக்கல் ஏற்படாது. பசியில்லையே என்று அலைமோதுபவர்கள், சாப்பிட்டில் மனம் செல்லாது விளையாடும் பிள்ளைகள் இவர்களுக்கு சிறந்த பசி தூண்டியாக கறிவேப்பிலை பயன்படுகிறது.
*
வாய்வு, சீதளம் காரணமாக இடுப்பு, கைகால், தொடை பகுதிகளில் பிடிப்பு வலி எற்படின் கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட தொல்லைகள் தீரும்.உடலுக்கு உற்சாகத்தை ஊட்டி தெம்பூட்டுவதில் கறிவேப்பிலை தன்னிரகரற்றது. மூளையினை முதலீடாகக் கொண்டு செயலாற்றும் ஆபீசர்கள் மூளை திசுக்களின் செயல்திறன் குன்றாமல் இருக்க கறிவேப்பிலையை மறந்து விடக்கூடாது.
*
சித்தப்பிரமை பிடித்தவர்களுக்கு கறிவேப்பிலையை மஞ்சள். சீரகத்துடன் கலந்து மோருடன் கலந்து 48 நாட்கள் பருகச் செய்தால் கைமேல் பலன் கிட்டும்.மூலச்சூடு, கருப்பைச்சூடு ஆகியவற்றைப் போக்குவதில் கறிவேப்பிலை வல்லமை பெற்றதாகும் உடல் சூட்டினைத் தணித்து உடல் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றது.
*
இதனால் கண் முதல் கால் நகம் வரை ஊட்டம் பெறும். குடல் சூட்டினால் வயிற்றுப்புண், காலரா, அமீபியாசிஸ், சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன் வெந்தயம்சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நிவராணம் துரிதமாகும்.
***
புற்றுநோய் தடுக்கும் கறிவேப்பிலை:
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
*
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
*
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
*
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
*
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
*
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
*
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
*
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.
*
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
*
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
*
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
*
பைத்தியம் தெளியபுத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.
*
சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்
*
அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.
***
நன்றி விக்கிபீடியா
நன்றி சிவாக்குமார்.
***
"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment