இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பெரும்பாலானோருக்கு பாதிப்பு உண்டாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
*
எலும்புத் தேய்வு என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான் என்றhலும், கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் அதை முடிந்த அளவுக்கு தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.
*
இந்நிலையில் உணவில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வெங்காயத்துக்கு எலும்புத் தேய்வை தடுக்கும் சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
*
சுவீடன் விஞ்ஞானிகள் வெள்ளை வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை எலும்புத் தேய்வினால் பாதிக்கப்பட்ட சில எலிகளுக்கு கொடுத்தனர். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த எலிகளை மீண்டும் சோதித்த போது அவற்றின் எலும்புகள் முன்னைவிட வலுவாகி இருப்பதும், அதன் அடர்த்தி அதிகரித்து இருப்பதும் தெரிய வந்தது.
*
பொதுவாக எலும்புகள் அடர்த்தி அதிகரிக்க கால்சியம் சத்து தான் காரணம். ஆனால் இந்த வெங்காயத்தில் அந்த வேலை இல்லை.
*
இதில் இருக்கும் GPCS என்ற கூட்டுப் பொருள் தான் தேய்ந்த எலும்புகளை வலுவாக்குவதிலும் அவற்றின் அடர்ததியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்தப் பொருள் பற்றி மேற்கொண்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
***
"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment