Saturday, April 9, 2011

கூந்தல் பராம‌ரி‌ப்‌பு பற்றி...‏

விளம்பரங்களில் வருவது போன்ற பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா. இதோ சில கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்



தலை‌முடி பராம‌ரி‌ப்‌பி‌ற்கு:

1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலா‌ம்.

*

2. இரண்டு முட்டைகளை உடைத்து அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் எடு‌த்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம்.

*

3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம்.

*

4. செ‌ம்பரு‌த்‌தி இலையை அரை‌த்து அதனை தலை‌யி‌ல் தே‌‌ய்‌த்து ‌ஊற‌வி‌ட்டு ‌பி‌‌ன்ன‌ர் ந‌ன்கு அல‌சி ‌விடவு‌ம்.

*

5. இர‌வி‌ல் லேசான சூ‌ட்டி‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் காலை‌யி‌ல் தலை‌க்கு கு‌ளி‌‌க்கலா‌ம்.

*

6. ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

*

7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

*

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

*

9. வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்.

*

9. ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

*

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

*

11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல் .

*

12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

*

13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

*

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .

*

15. கறிவேபிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.


***


தலைமுடிக்கு ஏற்ற வெந்தயம்:


1. இர‌வு படு‌க்க‌ப் போகு‌ம் மு‌ன்பு வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும்.

*

2. மறுநாள் காலை‌யி‌ல் அதை ‌விழுதாக அரை‌த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊற‌விடவு‌ம்.

*

3. பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

*

4. கோடை கால‌த்‌தி‌ல் இ‌ந்த வை‌த்‌திய‌ம் ‌மிகவு‌ம் ஏ‌ற்றது. க‌ண்களு‌க்கு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்கு‌ம்.

*

5. உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌க் குறை‌த்து உடலை கு‌ளி‌ர்‌ச்‌சியாக வை‌க்கு‌ம்.

*

6. ச‌ளி ‌பிடி‌த்‌திரு‌க்கு‌ம் போது ம‌ற்று‌ம் கா‌ய்‌ச்ச‌ல் சமய‌ங்க‌ளி‌ல் இதனை செ‌ய்ய வே‌ண்டாம‌்.


*

7. இர‌வு படு‌க்க‌ப் போகு‌ம் மு‌ன்பு வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும்.

*

8. மறுநாள் காலை‌யி‌ல் அதை ‌விழுதாக அரை‌த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊற‌விடவு‌ம்.

*

9. பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

*

10. கோடை கால‌த்‌தி‌ல் இ‌ந்த வை‌த்‌திய‌ம் ‌மிகவு‌ம் ஏ‌ற்றது. க‌ண்களு‌க்கு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்கு‌ம்.

*

11. உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌க் குறை‌த்து உடலை கு‌ளி‌ர்‌ச்‌சியாக வை‌க்கு‌ம்.

*

12. ச‌ளி ‌பிடி‌த்‌திரு‌க்கு‌ம் போது ம‌ற்று‌ம் கா‌ய்‌ச்ச‌ல் சமய‌ங்க‌ளி‌ல் இதனை செ‌ய்ய வே‌ண்டாம‌்.



***


கூந்தல் கறுமையாக வளர:


1. உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

*

2. உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடு‌த்த முடியாது.

*

3. தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

*

4. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.

*

5. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.


*

6. ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும். கண்டிஷரை முடியின் வேர்களைவிட நு‌னிப் பாகத்தில் தடவுவது நல்லது.


***


உதிர்தல் ரசாயன:


1. சங்க இலக்கியங்களில் பெண்களைப் பற்றி குறிப்பிடுகையில் கார் கூந்தல் அழகி என்றும், கூந்தலைப் பாயாக விரித்தாள் என்றும் வர்ணிப்பதை அறிகிறோம்.

*

2. ஆனால், தற்காலைப் பெண்களில் எத்தனை பேருக்கு அடர்த்தியான, கருமை நிற கூந்தல் உள்ளது.

*

3. கூந்தல் பராமரிப்பு என்பதே ஒரு தனிக்கலை எனலாம். பாட்டிமார், அம்மா, அக்காள் போன்றவர்கள் உதவியுடன் கூந்தலை சிக்கெலெடுத்து, பின்னி, மலர்களால் அலங்கரித்து சிங்காரிப்பதெல்லாம் இன்றையே அவசரகதி உலகில் சாத்தியமா? நிச்சயம் இல்லை. என்றாலும், ஒரு சில நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கூந்தலை சிறப்பாக பராமரிக்க முடியும்.

*

4. ரசாயனம் கலந்த தைலங்கள் மற்றும் எண்ணெய், கிரீம் போன்றவற்றை தடவுவது, மனக்கவலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

*

5. தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு நுனிப்பகுதியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் பெண்களின் கூந்தல் அழகு கெடுகிறது.

*

6. இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண, நுனிப் பகுதியை அடிக்கடி சிறிய அளவில் வெட்டி விட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிச் செய்வது பலன் அளிக்கும்.

*

7. மேலும் மாதம் ஒருமுறை ஷாம்பூ தடவிய பின் நீண்ட நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். சிறந்த நிறுவனங்களின் பிராண்டட் ஷாம்பூகளையே பயன்படுத்த வேண்டும். தலைமுடியை அதிக சூட்டில் உலர்த்த வேண்டாம்.

*

8. குளித்தவுடன் ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது தொப்பியை உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்.

*

9. கூந்தலை பராமரிப்பதற்கென்ற சென்னை போன்ற நகரங்களில் ஏராளமான அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அதுபோன்ற அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.
தலை-முடியின்-பராமரிப்பிற்கு

*

10. வெந்தயம் மற்றும் கடுகை ஊறவை‌த்து த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு ‌விழுதாக அரை‌த்து அதனை தலை‌யி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் கு‌ளுமையு‌ம் தலைமுடி‌க்கு ஆரோ‌க்‌கியமு‌ம் ‌கி‌ட்டு‌ம்.

*

11. 5 செம்பருத்தி இலைகளை பிய்த்து அதனை நன்றாக சாறாக செய்து கொள்ளவும் இதனைக் கொண்டு தலையை அலசவும்.

*

12. தேயிலை சாறை‌க் கொண்டு தலை முடியை வாரம் ஒரு முறையாவது அலசி வரவும். இதனால் முடி நிறம் மாறாமல் இருக்கும்.

*

13. தலை‌க்கு‌க் கு‌ளி‌த்த‌ப் ‌பிறகு முட்டை‌யி‌ன் வெள்ளைக் கருவை தே‌ய்‌த்து அல‌சினா‌ல் ந‌ல்ல க‌ண்டீஷனராக செய‌ல்படு‌ம்.

*

14. குளிக்கும் முன் சூடான தேங்காய் எண்ணெயை‌க் கொண்டு தலை‌க்கு மசா‌ஜ் செ‌ய்து ‌பிறகு அலசவும். இதனை தினசரி செது வரலாம்.

***


வீட்டிலேயே-முடி-வெட்டும்போது:

1. வீ‌ட்டிலேயே முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும்.

*

2. தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.

*

3. முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம். சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஹேர் கட் ஆரம்பிக்கவும்.

*

4. இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும். விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.

*

5. கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும். இந்த காது அறுகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.

*

6. ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம். துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.


***


தலைமுடி உதிர்கிறதா?


1. இளம் வயதினருக்கு, குறிப்பாக பெண்களுக்கு உள்ள பல்வேறு பிரச்னைகளில் தலைமுடி உதிர்வதும் ஒன்று.


இதற்கு என்ன தான் தீர்வு?

*

2. ஒரு சில நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் முடி உதிர்வதைத் தடுத்து கூந்தலை சிறப்பாக பராமரிக்க முடியும்.

*

3. தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு நுனிப்பகுதியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் பெண்களின் கூந்தல் அழகு கெடுகிறது.

*

4. இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண, நுனிப் பகுதியை அடிக்கடி சிறிய அளவில் வெட்டி விட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிச் செய்வது பலனளிக்கும்.

*

5. மேலும் மாதம் ஒருமுறை ஷாம்பூ தடவிய பின் நீண்ட நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். சிறந்த நிறுவனங்களின் பிராண்டட் ஷாம்பூகளையே பயன்படுத்த வேண்டும். தலைமுடியை அதிக சூட்டில் உலர்த்த வேண்டாம்.

*

6. குளித்தவுடன் ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது தொப்பியை உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்.

*

7. கூந்தலை பராமரிப்பதற்கென்ற அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.


***


தலைமுடி கொட்டுவதை தடுக்க:


சிலருக்கு தலைக்கு குளிக்கும்போதும், தலைவாரும்போதும், ஏன் தலையை தடவினால் கூட முடி கொட்டிகொண்டே இருக்கும். இதனால் வேதனைப்படுகிறவர்களுக்கு இதோ ஒரு ஆறுதல் டிப்ஸ்:


1. 100 மி.லி. கரிசாலங்கண்ணி சாறை ஒரு வாணலியில் ஊற்றி நன்றாக சூடாக்கவும். இதனுடன் 200 மி.லி.


*

2. தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டை பொடி, காய்ந்த ரோஜா இதழ்கள் 6 ஆகியவற்றை சேர்க்கவும்.

*

3. இந்த எண்ணெய்யை தினந்தோறும் தேய்த்துவர, முடி கொட்டுவது உடனடியாக நிற்கும். பெண்கள் இதை பயன்படுத்தினால் முடி நன்கு வளரும்.

கோடைக்கால கூந்தல் பாரமரிப்பு:

1. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

*

2. குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

*

3. சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

*

4. தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.

*

5. பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.


***



இயற்கையான ஷாம்பு:

எத்தனையோ ஷாம்பு பயன்படுத்தி பார்த்தாச்சு. ஒன்றும் பயன்படவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த இயற்கையான ஷாம்பு முறை உங்களுக்குத்தான்.


1. வெந்தயம் 1 கிலோ, முழு துவரை 1 கிலோ, புங்கங்கொட்டை 250 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் இவற்றை காய வைத்து, ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

*

2. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள்.

*

3. அழுக்கை நீக்குவதோடு, அட்டகாசமான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை இந்தப் பொடி பாதுகாக்கும்.


***


தலைமுடி கண்டிஷனர்:


பெரும்பாலானவர்கள் சிறு வயதில் தலைமுடியை சரிவரப் பராமரிப்பதில்லை. விளைவு? 35 - 40 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை அல்லது முன் வழுக்கை ஏற்பட்டு விடும்.



வேறுசிலர் மாதக்கணக்கில் தலைமுடிக்கு ஷாம்பூ போன்றவற்றைக் காட்டாமல் அழுக்குடன் வைத்திருப்பார்கள். இப்படி பராமரிப்பின்றி முடி இருப்பின், உதிர்வதற்கு நாமே வித்திடுவதாகி விடும்.



தலைமுடி உதிர்வைத் தடுக்கவும், அவற்றை முறையாகப் பராமரித்து ஆரோக்கியமாகத் திகழவும் இதோ சில தகவல்கள்:



1. தலைமுடியின் வகை எதுவாயிருந்தாலும் லேசான ஷாம்பு பயன்படுத்தி அதன் வனப்பையும் ஆரோக்கியத்தையும் காப்பது அவசியம்.

*

2. மிகவும் அழுக்கடைந்த முடிக்கு, கிளாரிஃபயர் பயன்படுத்தலாம். ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் நல்லது.

*

3. முடிக்கு இயற்கை எண்ணெய் தடவுவது அவசியம். எண்ணெய் தலையில் சிறிதளவேனும் இருப்பது நல்லது. கன்டிஷனர் நிறைந்த சன்ஸ்கிரின் பயன்படுத்தினால் முடியின் பளபளப்பு நீடிக்கும்.

*

4. டிரையர்களை சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முடி அதிகம் உலர்ந்து வறட்சியாகக் காணப்படும்.

*

5. கோடையில் பளபளப்பற்ற, வறட்சியான முடி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

*

6. தலைமுடிக்கு வண்ணம் பூசுவதும் நல்லது. நீச்சலின்போது முடி நன்கு அலசப்படுகிறது. உப்பு நீராக இருப்பின் முடியின் அடிப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும்.

*

7. நல்ல தண்ணீர் கொண்டு மீண்டும் தலையை அலச வேண்டும்.

*

8. கோடை காலத்தில் முடியைப் பாதுகாக்க தொப்பி அணிவது முக்கியம்.

*

9. மென்மையான கைக்குட்டையால் போர்த்தலாம். குடைபிடித்துச் செல்லலாம். தலையின் அடிப்பகுதி வரை சூரியனின் சூடு பட்டு முடிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

*

10. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க சென்னை போன்ற நகரங்களில் ஹெல்த் சென்டர்கள், அழகு நிலையங்கள் உள்ளன.



***
thanks webdunia
thanks 24dunia
thanks மங்கையர்கரசி
***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment