courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, March 1, 2011
தீராத சந்தேகம்
கியூபாவில் புரட்சிக்கு பாடுபட்ட சே குவாரா ,அதன் பின் காங்கோவில் புரட்சிக்கு வித்திட முனைந்தார்.அப்போது அவர் எகிப்தின் அதிபர் நாசரை சந்தித்தார்.சே யின் முடிவினை அறிந்த நாசர் மிகப் பொறுமையுடன் அவரிடம் சொன்னார்,''மக்களைக் காப்பாற்ற,வழி காட்ட வந்த பல தீர்க்கதரிசிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியுமல்லவா?நீயும்,இன்னும் பெரிய தாடியும்,தீர்க்கதரிசி போன்ற ஆடை அணிந்து வந்தாலும் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.எங்களையும் ஏற்க மாட்டார்கள்.நம் நிறமே அவர்களுக்குப் பிடிக்காது.வெள்ளையர்களுக்கு கருப்பு நிறம் பிடிக்காது.இவர்களுக்கோ வேறு நிறத்தைக் கண்டாலே சந்தேகம்.வெறுப்பார்கள்.விலகிப்போவார்கள்.நம்ப மாட்டார்கள்.நீ இவர்களுக்காகப் போராடி அநியாயமாகக் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை.''இதைக்கேட்டு குவேரா சற்று ஏமாற்றம் அடைந்தார்.எதைக் கேட்டும் மாறாத அவர் நாசர் சொன்னதைக் கேட்டும் மனம் மாறவில்லை.
Labels:
சிந்தனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment