courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, March 1, 2011
எது உதவும்?
ஒரு பெற்றோர் தன குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தனர்.அங்கு இருந்த ஆடும் மரக்குதிரையின் மீது ஏறி குழந்தை விளையாட ஆரம்பித்தது.புறப்படும் சமயம் பெற்றோர் குழந்தையை தூக்க சென்றபோது குழந்தை இறங்க மறுத்து அடம் செய்தது.''நம் வீட்டில் மூன்று மரக்குதிரைகள் இருக்கின்றன அதில் போய் விளையாடலாம் வா,''என அழைத்தனர்.குழந்தை வர மறுத்தது.வம்படியாகத் தூக்கி செல்லலாம் என்றால் அது அழுது அலறி ஆர்ப்பாட்டம் செய்தது.என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை.வீட்டுக்காரர்,''பக்கத்திலே ஒரு மனோ வைத்தியர் இருக்கிறார்.அவரை அழைத்து வந்தால் அவர் சரி செய்து விடுவார்,''என்று ஆலோசனை கூறினார்.வைத்தியர் வந்ததும் குழந்தையைப் பார்த்துவிட்டு,தனக்கு வர வேண்டிய ஊதியம் பற்றி முதலில் முடிவு செய்து கொண்டு,குழந்தையின் அருகில் சென்று,அதன் காதில் மெதுவாக ஏதோ சொன்னார்.குழந்தை உடனே கீழே இறங்கித்தான் தாயிடம் வந்து மரியாதையாக நின்று,''நம்ம வீட்டுக்குப் போகலாம் அம்மா,''என்றான்.அதிசயத்துடன் பெற்றோர்கள்,''என்ன மந்திரம் உபயோகித்தீர்கள்.இவ்வளவு விரைவில்நல்ல பிள்ளை ஆகிவிட்டானே!''என்று கேட்டனர்.மருத்துவர் தனஊதியத்தை முதலில் வாங்கிக் கொண்டு சொன்னார்,''உடனே நீ இறங்காவிட்டால்,நான் உன்னை அடிக்கிற அடியில் ஒரு வாரம் எழுந்திருக்க மாட்டாய்.உன்னை அடிக்க எனக்கு பணம் கிடைக்கிறது.அதனால் நான் சொல்வது விளையாட்டில்லை.உன்னை உறுதியாக அடிப்பேன்,என்று சொன்னேன்.''
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment