
1. உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.
*
2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.
*
3. பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது.
*
4. நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது.
*
5. உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.
*
6. உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.
*
7. உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
*
8. உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.
*
9. பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.
*
10. ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தக்கூடாது.
*
11. உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.
***
ஏன் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை பார்க்கவேண்டும்?
*
1. ஒவ்வொரு பொட்டல பொருள் மீதும் அந்த உணவு பொருள் தயாரித்த தேதி அச்சிடப்பட்டிருக்கும். அந்த உணவு பொருளை தயாரித்த தேதி தெரிந்தால் தான், அந்த உணவு பொருளை எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்ற விபரம் தெரியவரும்.
*
2. பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும். கடைகளில் விற்கப்படும் உணவு பொருளில் ஏதேனும் குறை காணப்பட்டாலோ, புகார் எழுந்தாலோ, கெட்டு போனாலோ அந்த பாட்ச் எண் உள்ள அனைத்து உணவு பொட்டலங்களை கடைகளில் இருந்து முழுமையாக அப்புறபடுத்த பாட்ச் எண் உதவும்.
*
3. சைவ அசைவ வகை உணவு குறியீடுகள், நாம் வாங்கும் உணவு பொருள் சுத்தமான சைவமா அல்லது அசைவ உணவா என தெரிந்து கொள்ள உதவும்.
*
4. எந்த தேதி வரை பயன்படுத்தலாம் (பெஸ்ட் பிபோர் டேட்) என்பது அந்த உணவு பொருளின் காலவதியாகும் நாளை குறிக்கும்.
*
5. தயாரிப்பாளரின் முழு விலாசம் இருந்தால்தான், அந்த உணவு பொருளில் ஏதேனும் குறையோ கலப்படமோ இருந்தால் அது பற்றி புகார் தெரிவிக்கவும், குறைகள் களையப்படாவிட்டால், தயாரிப்பளார் மீது உணவு கலப்படத் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உதவும் .
***
உணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்?
*
இன்று ஏதேனும் பொருள் வாங்க கடைக்கு சென்றால், பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களே அதிகம். சரி, நாம் வாங்கும் பொட்டல பொருட்கள் தரமானதுதானா? என்ன பார்க்கவேண்டும் அவற்றில்?
*
1. அந்த உணவு பொருளை தயாரித்த தேதி.
*
2. அந்த உணவு பொருளின் பாட்ச் எண்.
*
3. எந்த தேதி வரை அந்த உணவு பொருளை பயன்படுத்தலாம்.
*
4. அந்த உணவு பொருளின் எடை.
*
5. உணவு பொருள் தயாரிப்பவரின் முழு விலாசம்.
*
6. அந்த உணவு பொருளில் உள்ள மூல பொருட்களின் பட்டியல்.
*
7. உணவு பொருளின் பெயர்.
*
8. உணவு பொருள் சைவ வகையா அசைவ வகையா என்பதை குறிக்கும் முத்திரை.
***

மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து பொட்டல பொருட்களை வாங்கவேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருள் நல்ல பொருள் என்பதை உறுதி செய்ய முடியும்.
***
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் திரு. ஏ.ஆர். சங்கரலிங்கம் இவரை அனுகவும். அவருடைய தளம் தான் உணவு உலகம்.
*
by FOOD .
***
நன்றி உணவு உலகம்.
http://unavuulagam.blogspot.com/
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment