Sunday, March 20, 2011

வெளிறிய நாக்கு...?

அப்படீன்னா ரத்தசோகை.. உஷார்:

*


ஜாலிக்காக தோழிகளுடன் "ஜங்க் புட்' சாப்பிடலாம்; ஆபீசில் வேலை...வேலை என்று வெறும் கோக் குடித்து பசியை போக்கிக்கொள்ளலாம். ஆனால், சுறுசுறு...வென இருந்த நீங்கள், திடீரென சோர்ந்து போவீர்கள்; டாக்டரிடம் போனால் ரத்த சோகை என்பார்.

*

அப்புறம் தான், சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற "ஞானோதயமே' வரும் உங்களுக்கு. இப்படி உங்களுக்கு மட்டுமல்ல, "டீன் ஏஜில்' உள்ள பல பெண்களுக்கும் உள்ள பிரச்னை தான்

*


நம் உடலுக்கு வைட்டமின், கனிம சத்துக்கள் தேவை; அதற்கான உணவு வகைகளை சாப்பிட்டால் தான், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும்; அதனால், பல உறுப்புகளுக்கும் போதுமான அளவில் ரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு நீடிக்கும்.

***

ஹிமோகுளோபின் இல்லாட்டி:

*

ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டும்; அப்போது தான் ரத்தத்தில் முழு ஆக்சிஜன் இருக்கிறது என்று பொருள். உடலில் இரும்புச்சத்து சேர்ந்தால் தான் ஹிமோ குறையாமல் இருக்கும்.உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால், அதற்கான சத்தான உணவுவகைகளை அடிக்கடி சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தால் தான் ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.


***

என்னென்ன உணவுகள் சாப்பிடனும்:

*


முன்பெல்லாம், ஆண்களை விட, பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்பட்டது. ஆனால், இப்போது "ஜங்க் புட்' உணவுப்பழக்கம் வந்ததில் இருந்து, இளம் பருவத்தினர் இருபாலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். பருப்பு கீரை முதல் புதினா வரை கீரை வகைகள், தானிய வகைகள், தண்டு, பீட்ரூட் போன்ற காய்கறிகள், மீன் உணவுபோன்றவற்றில் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. டானிக்கோ, மாத்திரைகளோ வேண்டாம்; இவற்றை சாப்பிட்டு வந்தாலே "அயர்ன்' உட்பட மினரல் தட்டுப்பாடே வராது.

***

நாக்கை பாருங்க:

*

ஒருவருக்கு ரத்த சோகை இருப்பதாக சந்தேகித்தால் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்; டாக்டர் பரிசோதிக்கும் போது, கண்கள், நகக்கண்களை பார்த்துச் சொல்வர்; ஆனால், அது கூட போதுமான ஆதாரமாக கருத முடியாது என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். நாக்கை பார்த்தாலே தெரியும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாக்கு மேற்பரப்பு, கருஞ்சிவப்பாக இருந்தால் முழு ஆரோக்கியம் இருக்கிறது; ரத்தத்தில் பழுப்பு நிறம் கலந்து வெளுப்பேறி இருந்தால் ரத்த சோகை ஆரம்பம் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



***

"டீன் ஏஜ்' யுவதிகளே:

*

ஆண்களை விட, இளம் வயது பெண்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பெண்களுக்கே உரிய பிரச்னைகளால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. ரத்த சோகையின் முதல் அறிகுறி சோர்வு தான். அடிக்கடி சோர்ந்து விழுவர். ஆனால், ரத்த சோகை என்றே தெரியாமல், தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பர். டாக்டரிடம் போனால் மட்டுமே பிரச்னை பெரிதாகிவிட்டது புரியும்.


***

"ஙே' என்று இருப்பதேன்:

*

சோமாலியா போன்ற ஏழை நாடுகளில், குழந்தைகள், எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருப்பர்; காரணம், இரும்புச்சத்து அறவே இல்லாமல் இருப்பது தான். சாப்பாட்டுக்கே வழியில்லாத நாட்டில் சத்தில்லாததால் குழந்தைகள் மிகவும் நோஞ்சானாக இருக்கும்.

***


உடலில் உள்ள முதுகுத்தண்டு:

*

வடத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை தான், ஹிமோக்ளோபின் எனபபடும் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி. இரும்புச்சத்து இருந்தால் தான் வலுவான சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.அப்படி இல்லாவிட்டால், சிவப்பு அணுக்களில் சக்தி இருக்காது; அதனால் ரத்தம் வலுவிழந்து இருப்பதால், ஆக்சிஜன் குறைந்து காணப்படுகிறது. போதுமான ஆக்சிஜனுடன் ரத்தம் போகாவிட்டால், அந்தந்த உறுப்புகள் வலிமை குறைந்து சோர்ந்து விடுகின்றன.


***


கண்டபடி சாப்பிடாதீங்க:

*

இப்போது இளைய தலைமுறையினரிடம் உணவுப்பழக்கம் மாறி விட்டது. அதனால், அவர்கள் உடலில் வைட்டமின், இரும்பு, மக்னீசியம் உட்பட கனிம சத்து குறைந்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். எப்போதுமே, "ஜங்க் புட்' என்று சாப்பிடாமல், சத்தான காய்கறி, பழங்கள், தானிய வகைள் கலந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும், அனீமியா என்ற ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.

***




இது போல் இருந்தால் நாம் வாழ்வு ( நோய் இன்றி ) சிறக்கும். இப்படத்தில் உள்ளது போல் நம் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
***
ஹலோ டாக்டர்
http://www.dinamalar.com
***

நன்றி தினமலர்.

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment