*
(இந்தக் கட்டுரை குளிர்வலய நாடுகளில் வாழுபவர்களுக்கு பொருந்தும்.)
*
இரவா, பகலா கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை… சிறுகச் சிறுக சேமித்த பணத்தை உங்கள் வீட்டுக்குள்ளே இருந்தபடியே வெளியே வீசாமல் இருக்க - குளிர்காலங்களில் நிறைய விடயங்கள் பற்றி யோசிக்க வேண்டும்.ENERGY SAVING என்பது பற்றி எமக்குத்தெரியாமல் அல்லது கவனிக்காமல் அல்லது அட இதில் என்ன இருக்கின்றது என் எண்ணிய இடங்களில் நாம் கோட்டை விடுகின்றோம்.
*
குளிர்காலம் என்பது மட்டும் அல்லாமல் சில வழிகளை எப்பவுமே கருத்திற் கொள்ளவேண்டியது முக்கிய அம்சமாகும்.அட அப்படி என்ன புதுமை இருக்கின்றது இதில் என்று ஆரம்பத்தில் எண்ணிய போதும் இதுபற்றி ஆளமாக பார்வையை கொண்டபின் அனுபவத்திலேயே என் Gas/Electric/water களின் Billகளில் கணிசமான அளவு சேமிப்பை பெறக்கூடியதாக இருந்தது.
*
பொதுவாக October மாதம் முதல் March மாதம் வரை வீட்டில் Heaterஐ உபயோகிக்க வேண்டி வரும். இந்தக்காலத்தில் வீட்டின் வெப்பத்தை வீணடிக்காமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமான விடயம்.வெப்பநிலையை 21°C ல் வைப்பதே பரிந்துரைக்கப்பட்ட அளவு. அதைவிட அதிகமாக கூட்டுவதை தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்திலும் ‘நான் வெறும் மேலுடன் தான் இருப்பேன், வெறும் காலுடன் தான் நடப்பேன்’ என்று அடம் பிடிக்க வேண்டாம். போதுமான உடைகளை வீட்டினுள்ளும் அணிந்திருங்கள்.
*
சிராமிக் நிலத்திலோ, டைல்ஸ் நிலத்திலோ கால் படும்போது சிலவேளைகளில் குளிர்வதுபோல் தோன்றும். காலுக்கு soks அல்லது வீட்டினுள் குளிருக்கு அணியும் பாதணிகளை அணியல்லாம்.புகைபிடிப்பவர்கள் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போய் புகை பிடித்துவிட்டு வாருங்கள். wash room களின் உள் சென்று ventilation fanஐ போட்டுவிட்டு புகைப்பதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் போடும் ventilation fan உங்கள் வீட்டின் வெப்பக்காற்றை வெளையே விசிறி அடிக்கின்றது என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.
*
அதே வேளை புகைப்பதற்கு அடிக்கடி வெளியே போய்வருவதாலும் கதவினூடாக குளிர்காற்று உள்ளேயும், வெப்பக்காற்று வெளியேயும் செல்லும். இதனால் உங்கள் வீட்டின் வெப்பநிலை குறைந்து, வெப்பத்தை சரிசெய்ய மேலதிகமாக Heater ஓடவேண்டி இருக்கும். அப்படி வெளியே போய் புகைக்க குளிர் ஒத்துவராவிட்டால் குளிர்காலங்களில் ஆவது புகைப்பதை நிறுத்துங்கள். புகைப்பது மட்டும் என்ன உடம்புக்கு ஒத்துவரும் செயலா என்ன?
*
Ventilation fan என்பது தேவைக்கு மட்டும் உபயோகிக்கும் ஒரு சாதனம் என்பதை எப்பவும் நினைவில் கொள்ள வேண்டும். இது சமையல் கட்டில் இருக்கும் ventilation fanக்கும் மிகவும் பொருந்தும்.
***
வெங்காயம் வதக்குதல், அதிக செறிவுள்ள மசாலா உணவு சமைத்தல், மீன் பொரித்தல் போன்ற அதிக மணத்தை உடைய உணவை சமைக்கும் போது மாத்திரம் ventilation fanஐ உபயோகியுங்கள். குளிர்காலங்களில் வீட்டினுள் ‘கருவாடு சுட்டுத்தான் கறிவைப்பேன்’ என அடம் பிடிக்க வேண்டாம். தேவையானால் garage உள்ளே இந்தமாதிரி சமையல்களை நடத்துங்கள்.
*
மின்சாரத்தைப் பொறுத்தவரை அதிகமாக செலவளிப்பது சமையல் செய்யும் electric stove, உடுப்பு காயவைக்கும் drier, தொலைக்காட்சி என்பன பெரும் பங்கு வகிக்கின்றன.
*
சமைக்காமல் ஒன்றும் செய்யமுடியாதுதான். அதற்காக எந்த நேரமும் சமைக்க வேண்டும் என்பதல்ல. திட்டமிட்டு ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு மூன்று நாளைக்கு சேர்த்து சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கல்லாம்.நேற்று சமைத்ததை இன்று சாப்பிடமாட்டேன் என்று குதர்க்கம் பேசுபவர்கள் ஒறை தெரிந்து கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் 90% மான உணவுப்பொறுட்களை எமக்கு வந்து சேரும் முன்னமே பலநாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்துதான் வருகின்றது.
*
கோழி உயிர்வாழ்ந்ததை விட அது இறந்தபின் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த காலம் தான் அதிகம்! அதை வாங்கித்தானே நாங்கள் சமைக்கின்றோம்.
சிலர் குளிக்கும் போது ஊரில் குளிப்பது போல் வாளியில் நிரப்பிவிட்டுக்கொண்டு சும்மா ஜாலியா அள்ளி அள்ளி ஊத்துவார்கள். அவர்கள் ஊத்துவதில் 10%தான் அவர்களது உடலில் படும். மிகுதியெல்லாம் வீணாகும்.
இதனால் தண்ணீர் மட்டுமல்ல சுடுதண்ணீரும் தான் வீணடிக்கப்படுகின்றது. (குளிர் தண்ணீரில் குளிக்க முடியாது) எனவே நீனை சூடுபண்ண gas/மின்சாரம் தேவையில்லாமல் செலவாகின்றது.இந்த Shower இலும் பார்க்க hand held shower மிகவும் சிறப்பு. தேவையாயின் இதை சாதாரன shower மாதிரியும் மேலே மாட்டல்லாம், இது நோக்கம் அறிந்து குளிக்க அல்லது கழுவ உதவும். இந்த hand held shower இனால் பெருமளவு நீர் விரயமாவது மிச்சப்படுகின்றது.
*1. Basement முடித்திருந்தால் நல்லது. அல்லது Insulating ஆவது செய்திருக்க வேண்டும். Insulating செய்யப்பட்ட basement உம், attic wall உம் உங்கள் Energy bill ஐ 30% குறைக்கும்.
7. Air Ducts களினூடாக 20% மான வெப்பம் வீட்டின் வசிக்கும் இடம் தவிர்ந்த இடங்களுக்கு அதாவது வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் இடையில், Attic எனப்படும் கூரையின் கீழ்ப்பகுதியினுள்ளும் சென்றுவிட வாய்ப்புள்ளது. இதைத்தவிர்ப்பதற்கு Air Ducts களை சரியான முறையில் Seal செய்யவேண்டும்.
2. குளிர்சாதனப் பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக குளிரை கூட்டாதீர்கள். Ideal temperature ஐ விட நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு டிகிரி குளிருக்கும் 2% அதிகமாக energy தேவைப்படுகின்றது.
3. சாதாரண Ovenகளை விட Convection Ovenகள் அதிக efficient திறனை கொண்டவையாக காணப்படுகின்றது. Convection Oven களில் வெப்பமான காற்று சுளட்டப்படுவதால் உணவுகள் வெப்ப விரையம் இன்றி குறைந்த சூட்டிலேயே நன்றாக சமைக்கப்படுகின்றன.
4. இவைகளை விட ஒரு சின்ன விடையம், உணவுகளை சமைக்கும் போது மூடிச்சமைப்பதால் 20% மான energy சேமிக்கப்படுவதுடன் குறைந்த நேரத்திலும், உணவுகள் எல்லாம் சமமாக சமைபடவும் உதவும்.
5. பெரும்பாலும் Pressure Cooker களை பயன்படுத்துங்கள். இவை மிகச்சிறந்த energy சேமிக்கும் சாதனம்.
6. Dishwasher ஐ உபயோகிப்பது ஒரு energy சேமிப்பு முறையாகும். 5 நிமிடங்கள் சாதாரண Tap தண்ணீரில பாத்திரங்களை கழுவும் போது 115லீட்டர் தண்ணீர் செலவாகும். அதே பாத்திரங்களை Dishwasherல் கழுவ 30 லீட்டரிலும் குறைவான தண்ணீரே செலவாகும்.
7. சிலர் பொதுவாக Dishwasherகளில் பாத்திரங்களை போடும் போது வெளியே Tap தண்ணீரில் ஒருதரம் கழுவிவிட்டு பின்னரே மீண்டும் Dishwasherகளில் கழுவுகின்றனர். இது வேடிக்கையானதும், Dishwasherஐயே கேவலப்படுத்தும் செயலாகும். Dishwasher வடிவமைத்தது எம்மை விட சுத்தமாக பாத்திரங்களை கழுவித்தரவே. அதைவிட இப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட Dishwasherகளில், பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுகளைக்கூட சேகரித்து அரைத்து கூழாக்கி தண்ணியுடன் சேர்த்து வெளையே அனுப்பிவிடும். ஆதனினால் அத்தகைய Dishwasherகளை உடையவர்கள் இனி உணவை வளித்துக்கூட போடத் தேவையில்லை. அப்படியே கழுவல்லாம்.
8. Washing machines களில் எந்த வகை குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்துகின்றதோ அதுவே High efficient திறனுள்ள வகை. உடைகளை தோய்ப்பதுக்கு குறைந்தளவு சுடுதண்ணீரை இவை எடுத்துக்கொள்ளும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
9. Front-loading அல்லது Horizontal axis Washing machineகள் Top-loading Washing machineகளைவிட 40% குறைவான தண்ணீரையும், 50% குறைவான energy ஐயும் பயன்படுத்துகின்றன. அத்துடன் உடைகளையும் வேகமாக சுற்றுகின்றன (Spin). இதனால் உடைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி, உடைகளை காய வைக்க குறைந்த நேரமே தேவைப்படுகின்றது.
10. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல். சிறிதாயினும் சிரத்தையுடன் கவனம் எடுக்கவும்.
*
by barthee.
***
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment