Sunday, March 20, 2011

மலை வேம்பு

மலை வேம்பு மரங்கள்:




மலை வேம்பு குறைந்த அளவு நீர்வளம் கொண்ட நிலங்களிலும் நன்கு வளரும். வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது. குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி உயரம் வரை) பக்கக் கிளைகள் வராது. பராமரிப்பு எளிது.



மிக வேகமாக வளரும் தன்மை உடையது. மரக் கழிவு அதிகம் இல்லை. பராமரிக்க குறைந்த ஆட்களே தேவை. மலைவேம்பு நடவு செய்த 5 ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம். இலை ஆடுகளுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது. வாழை, நிலக்கடலை, மிளகாய், மரவள்ளி, மஞ்சள், உளுந்து ஆகிய பயிர்களில் ஊடுபயிராகப் பயிரிடலாம்.


*


பிளைவுட் மட்டுமல்லாது பல வகை உபயோகத்திற்கும் பயன் படுகிறது. மலைவேம்பில் 2 வகை உள்ளது. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது. இது பயிர் செய்த சில மாதங்கள் கழித்தே தெரியவரும்.

*
உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் ‘மலை வேம்பு’ மரங்கள்.
***
தினமலர் விவசாய மலர்.
நன்றி விவசாய மலர்


***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment