*
1. கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.
*
2. உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.
*
3. சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.
*
4. மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.
*
5. மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
*
6. "வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.
*
7. கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.
*
8. கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.
*
9. "குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.
*
10. இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.
*
11. பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.
*
12. இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.
*
13. அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.
*
14. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.
*
15. மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.
*
16. மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.
*
17. மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.
*
பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்:
*
18. வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.
*
19. தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.
*
20. பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.
*
21. பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.
*
22. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.
*
23. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.
*
24. ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபாரியாவார்.
*
25. மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.
***
நான் படித்து ரசித்தது போல் உங்கலுக்கும் ரசிக்க முடிந்தால் நான் மகிழ்வேன்!
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment