Sunday, April 3, 2011

பாக்கு அதன் பயன்களும்

பாக்கு மரமும் பாகங்களும்:




ஒருகாலத்தில் வெற்றிலை போடும் வழக்கம் நிறைய இருந்தது. விருந்துகளின்போது கட்டாயமாக வெற்றிலை பாக்கு உண்டு. அப்போது வெற்றிலை போட்டுக்கொள்வது ஒரு மரியாதை.

*

அவர்களின் கொச்பிடலிட்ய்-யை நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட பணம் பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் வெற்றிலை பாக்கு இருக்கும்.பல சம்பிரதாயங்களில் வெற்றிலை பாக்கு உண்டு.

*


மங்கலகரமான எட்டுப் பொருள்களில் வெற்றிலையும் ஒன்று. இப்போதெல்லாம் வெற்றிலை போடும் வழக்கம் அருகிவிட்டது. சிலர் சிலவேளைகளில் பீடா போடுவார்கள்.

*

பீடாவைப் பற்றிய பழைய மடல் அகத்தியத்தில் உண்டு. வெற்றிலையை வெறும் வெற்றிலையாகப் போடுவதில்லை.பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துத்தான் போடவேண்டும்.

*


பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆங்கில மொழியில் பாக்கை Bஎடெல் ணுட், ஆரெcஅ ணுட் என்று சொல்கிறோம். அரெக்கா என்பது அடைக்காயின் மருவல்.

*

பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்க்கள். கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று.

*

இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம். பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான். அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.


***

பினாங்கு மாநிலத்தின் கொடி:



ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நானே பார்த்திருக்கிறேன். இரண்டாம் உலகயுத்தத்தின்போது குண்டுவிழுந்து தரைமட்டமாகிய வீடுகளின் இடிபாடுகளை அப்புறப்படுத்தியபின் அந்த இடங்களில் பெரும்பாலும் பழைய சிமெண்டுத்தரை அப்படியே இருக்கும்.

*

நான்கைந்துவீடுகளின் இடுபாடுகளையெல்லாம் சுத்தமாக்கிவிட்டு அந்த இடத்தில் பாக்கைப் பரப்பிக் காயவைத்து, மலைபோலக் குவித்து வைத்திருப்பார்கள். அங்கேயே சாக்குகளில் நிரப்பி கைவண்டிகளில் ஏற்றி அருகிலிருக்கும் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

*

ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்தவர்களிடம் பினாங்குத்தீவில் பாக்குக் காயவைக்கும்போது அங்கு வரும் காக்கைகளை விரட்டுவதற்கு ஆள்தேவைப்படுகிறது என்று சொல்லியே கூலிவேலைக்கு ஆள்பிடித்துக் கூட்டிவந்ததாகச் சொல்வார்கள்.அப்போது அப்படி கூட்டிவரப்பட்டவர்களின் கதை சோகக்கதை. அது வேறு கதை.

***

உரிக்காத பாக்கு:


பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர் இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பார்கள். இவ்வாறு காயவைக்கப்பட்டது.

*

பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர்இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பது. இவ்வாறு காயவைப்பது கொட்டைப்பாக்கை அவித்து, அதை ஆறவைத்து, அதை ஸ்லைஸ் ஸ்லைஸாக வெட்டி, அதன்பின் காய வைப்பார்கள்.

*

இதைக் 'களிப்பாக்கு' என்று குறிப்பிடுவார்கள்.இது 'மொறுகுமொறுகு'வென்று இருக்கும். இதன் சுவையும்வித்தியாசமானதுதான. கொட்டைப் பாக்கை அப்படியே கடிப்பது என்பது பலருக்கு இயலாத காரியம். ஒருசிலரால் அவ்வாறு கடிக்கமுடியும். பற்களுக்கு இடையில் வைத்து 'நறுக்'கென்று கடித்துவிடுவார்கள்.'டக்'கென்று பாக்குப் பிளக்கும்.

*

நொடிப்பொழுதை ஒரு காலத்தில் 'பாக்குக் கடிக்கும் நேரம்' என்று குறிப்பிடும் சொல்வழக்கு ஒன்று இருந்தது. இவ்வளவு சிரமப்படவேண்டாம் என்று பலர் ஒரு கருவியை வைத்திருப்பார்கள். அதனைப் 'பாக்குவெட்டி' என்று அழைப்பார்கள். இரண்டு கைப்பிடிகள். இடுக்கி போல் இருக்கும்.

*
ஒரு பிடியில் பதமான கத்தி இருக்கும். பாக்கைவைத்து கைப்பிடிகளை இறுக்கினால் பாக்குப் பிளந்துவிடும். பாக்குகளை மெல்லிய இழைகளாகச் சீவிவைப்பதும் உண்டு.இதைச் சீவல் பாக்கு என்பார்கள்.

*

சீவலை நெய்யில் முந்திரிப்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றுடன் நெய்யில் வறுத்து வைப்பதும் உண்டு. சிறிய துணுக்குகளாகப் பாக்கைவெட்டி அந்தத் துணுக்குகளையும் பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து நெய்யில் வறுத்துவைப்பதும் ஒருவகை. வாசனைப் பாக்குத்தூள் என்பது இது.

*

'அசோகா' வாசனைப்பாக்கு, மதுரை சாமுண்டி வாசனைப் பாக்கு ஆகியவை மிகவும் புகழ பெற்றவையாக இருந்தன. மதுரை மேலக்கோபுரத்தெரு முழுவதுமே சாமுண்டி பாக்குத் தூளும் டெல்லிவாலா நெய் ஸ்வீட்டுகளும் நரசு'ஸ் காப்பித்தூளும் சேர்ந்துமணக்கும். அது ஒரு தனி அலாதிதான்.

*

மதுரையில் மல்லிகை மட்டுமே மணக்கும் என்பதில்லை. 'ரெட்' படத்தின் மூலம் அந்தக் கருத்து பரவிவிட்டது. மதுரையில் பலவகையான மணங்கள் உண்டு. கொட்டைப் பாக்கு களிப்பாக்கு ஆகியவை காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் வரும்.

*

கீழ்க்கண்ட படத்தில் மலேசியாவின் இருபது காசு நாணயத்தைக் காணலாம்.


மலேசிய இருபது காசு நாணயம்.
மலாய்க்காரர்களுடைய வெற்றிலைச்செல்வம்.
பாக்குவெட்டியும் அருகில் இருக்கிறது.






அந்த நாணயத்தின் ஒருபுறத்தில் மலாய்க்காரர்கள் பயன்படுத்தும் வெற்றிலைப் பெட்டி, வெற்றிலை, சுண்ணாம்பு டப்பி, ஏலக்காய் டப்பி, வெட்டப்பட்ட பாக்குத்தூள் டப்பி ஆகியவற்றுடன் முழுப்பாக்கு ஒன்றுடன் பாக்குவெட்டியையும் வெற்றிலைப் பெட்டியின் அருகில் காணலாம். வயதானவர்கள் பயன்படுத்தும் பாக்கு உரலும்கூட அவர்களிடம் உண்டு.

*

BY- கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



***

பாக்கு மென்றால் புற்றுநோய் ...




ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

*


தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.

*


தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது.

*

தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*


கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.

*


பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

*


அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.

*


ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.

***


வெற்றிலை பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகுமா?




கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகும். இது தவிர, புகைத்தல், மருந்துகள், வாயை சுத்தம் செய்யும் மருந்துகள், ஆஸ்பி¡¢ன், அம்மோனியா, குளோ¡¢ன், வாய்ப்புற்று நோய்க்காக அளிக்கப்படும் ரேடியக் கதிர்வீச்சு ஆகியவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும்.

*

இதை உடனடியாகக் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த நாளங்கள் வி¡¢வடைந்து இரத்த ஒழுக்கு ஏற்படும். நாட்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஈறு நீலம் கலந்த சிவப்பாகவும், தொட்டால் வலிக்கும் தன்மை கொண்டதாகவும் மாறும்.

BY- - Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,


***

நன்றி மார்டன் தமிழ்வெல்டு.
நன்றி www.bbc.co.uk
நன்றி visvacomplex.com


***


"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment