Sunday, April 3, 2011

நமக்கு உடலில் விட்டமின் ‘ஏ’ சத்து அதிகரிக்க!

என் பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கிறான்.​ டாக்டர்,​​ மீன் எண்ணெய் கேப்ஸ்யூல் சாப்பிட்டால் உடல் நல்ல வனப்புடன் ஆகிவிடும் என்றார்.​ ​ ஆனால் அவனுக்கு அது செரிக்காமல் பசி மந்தம் ஏற்படுகிறது.​ இதற்கு மாற்றாக ஆயுர்வேத மருந்து ஏதும் இருக்கிறதா?​ விட்டமின் ஏ சத்து அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?





உங்களுடைய மகனுக்கு வயிறு மந்தமாக இருக்கிறது.​ அதனால் கொழுப்புமிக்க மீன் எண்ணெய் செரிக்கவில்லை.​

*

இதற்கு மாற்றாக ஆட்டுப்பால்,​​ பசும்பால்,​​ பசுவின் தயிர்,​​ வெண்ணெய்,​​ வெந்தயம் இவற்றை உணவாகக் கொடுக்கலாம்.​

*

பசி மந்தம் நீங்கினால்தான் இவற்றில் உள்ள சத்து உடலில் சேரும்.​

*

அதற்குச் சிறந்த வழி கொத்தமல்லி துவையல் அல்லது கறிவேப்பிலைத் துவையல் செய்து சூடான சாதத்துடன் கலந்து,​​ ​ சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.​

*

அதற்கு மேல் ​ நன்றாகக் கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் குடிக்கக் கொடுக்கவும்.​ இதைக் காலை உணவாக சிறிது நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர,​​ பசித்தீ மளமளவென வளரும்.​

***

ஒருசில உணவில் உள்ள யூனிட் விட்டமின்:


1. மேலும் கொத்தமல்லியும்,​​ கறிவேப்பிலையும் மீன் எண்ணெய்க்குச் சற்றும் குறைந்தவை அல்ல.​

*

2, 100 கிராம் மீன் எண்ணெய்யில் சுமார் 50,000 யூனிட் விட்டமின் ஏ கணிசமாக உள்ளது எனக் கூறுகின்றனர்.​

*

3, அதேபோல பச்சைக் கொத்தமல்லி இலையில் சுமார் 12,500 யூனிட்டும்,

*​​

4. பச்சைக் கர்ரிவீப்பிலையில் 12,500 யூனிட்டும்,

*​​

5. முருங்கைக்கீரையில் 11,500 யூனிட்டும்,​​

*

6. அகத்திக்கீரையில் 10,000 யூனிட்டும்,​​

*

7. முளைக்கீரை,​​ அரைக்கீரை,​​ வெற்றிலை ஆகியவற்றில் 10,000 யூனிட்டும் விட்டமின் ஏ கணிச விகிதத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.​

*

8. 5,000 யூனிட் வேப்பிலைக் கொழுந்துவிலும்,​​ பசலைக்கீரை மற்றும் வெந்தயக் கீரையில் 4,000 யூனிட்டும் விட்டமின் ஏ இருப்பதாகத் தெரிகிறது.
*
இவை அனைத்தும் உடலுக்கு ஒரு தொந்தரவும் செய்வதில்லை.​

**

அழகாக சமைத்து ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்துவிட்டால் பார்ப்பதற்குத்தான் எத்தனை அழகு!​ மனதிற்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன!​

*

எத்தனை விரைவில் செரித்து பசியைத் தூண்டுகின்றன!​ எந்தப் போஷகச் சத்தையும் உடல்தானே ஏற்றுக்கொள்ளும் சக்தியை இவை மூலம் பெறுவதால் உங்கள் மகன் விரைவில் நோஞ்சான் நிலையிலிருந்து மீண்டு,​​ குண்டாக அழகாக கொழுகொழு குழந்தையாகக் காட்டலாம்.


*


உணவுச் சத்து இடைவிடாமல் சேர்வதால் உடல் புஷ்டிதானே ஏற்படும்.​ அடிக்கடி காய்ச்சல்,​​ சளி முதலிய நோய்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.​

*

அதற்கு எண்ணெய்க் குளியலைத் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.​ உங்களுடைய மகனுக்கு ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் புஷ்டியைத் தரக்கூடும்.​

*

லாக்ஷதி தைலம்,​​ சந்தன பலாலாக்ஷôதி தைலம்,​​ அச்வகந்தி பலாலாக்ஷôதி தைலம் முதலியவை இந்நிலையில் ஏற்ற எண்ணெய் தேய்ப்புத் தைலங்கள் ஆகும்.


*


ஆக,​ ​ உள்ளுக்கு விட்டமின் ஏ சத்து நிறைந்த அதே சமயத்தில் ஜீர்ணகோச உறுப்புகளின் சக்தியையும் தூண்ட உதவும் கொத்தமல்லி,​​ கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவும்,​​ மேலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும்,​​ உடலில் சுறுசுறுப்படைந்த பசித்தீ,​​ கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.​

*

எதையும் செரிக்கும் அளவிற்கு அது வளர்ந்துவிட்டால்,​​ தினமும் காலைச் சிற்றுண்டியுடன் இரண்டு உளுந்து வடையை,​​ நடுவே ஓட்டை போடாமல்!​ பசு நெய்யில் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கவும்.​

*

உடல் வனப்பு நன்றாகக் கூடும்.​ அதன் பிறகு ஆயுர்வேத லேஹிய மருந்துகளாகிய கூஷ்மாண்டரஸôயனம்,​​ அமிருதப்ராசம்,​​ சியவனப்ராசம்,​​ பிராம்ஹ ரஸôயனம் போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடக் கொடுக்கவும்.


***

நன்றி தினமணி!

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment