கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத சுழற்சியை கொண்டுவரும்.
*
இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்க காரணமாக பிட்யூட்டரி சுரப்பி என்ற மூளையின் பகுதி FSH (Follicle stimuluating Hormone)சுரக்கும். இதுவும் LH ன்ற ஹார்மோனும் கருப்பையை தூண்டும், முட்டை உருவாக வழி செய்யும். மாதவிடாயின் போது, இரத்தத்தில் ஈச்ட்ரோஜன்/ஈஸ்ட்ரடையால் அதிகரிக்க, FSH சுரப்பை கட்டுப்படுத்து.
*
ஆனால் பிரிமெனோபாஸ் போது இரத்தத்தில் ஈஸ்ட்ரடையால் அளவு குறயும். அது FSH சுரப்பதை தடை செய்யாமல், அது எப்போது அதிக அளவிலேயே இருக்கும். பெரி மெனோபாஸ் போது (35 வயது முதல் ஆரம்பிக்கலாம்) மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை என்று நாளாகி ஆரம்பித்து நிறைய உதிரப்போக்கு இருக்கும்.
*
ப்ரி மெனோபாஸ் போது தலை முடி உதிருதல், அடிக்கடி கோபம் அல்லது அழுகை போன்ற உணர்வுகள், வரட்சியான சருமம்,அதிக உடல் சூடு போல ஒரு உணர்வு வரும். கொலஸ்டிராலில் இருந்து ஈச்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உருவாக NADPH என்ற ஒரு என்சைம் உதவும்.
*
மாதவிலக்கு நிற்கும் நிலையில் இந்த என்சைம் ஈஸ்ட்ரோஜன் தயாரிப்புக்கு பதிலாக கொலஸ்டிராலின் உப பொருட்களை தரும். ஆகவே மாதவிலக்கு நிற்கும் பெண்களின் கொலஸ்டிரால் கூட வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஹாட் பிளாஷஸ் வர ஒரு காரணம்.
*
இதனாலேயே பெண்கள் செரிக்கும் திறன் குறையவும், உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது. மேலும் உணர்வு பூர்வமாக சில பிரச்சினைகள் வரும் போது, உண்பது சிலருக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் (soul food, comforting food) ஏற்கெனவே குறைந்த செரிமானம் இருப்பதால் இது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும்.
*
இந்த ஹார்மோன் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், நடுத்தர பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை பொதுவாக கேலி செய்யும் போக்கை காணலாம். இதனை சரிக்கட்ட கூடுதல் உடல்பயிற்சி, உணவில் இன்னும் அதிக கட்டுப்பாடு தேவையாய் இருக்கும்.
*
ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி் இதில் ஈடுபட்டிருப்பதால் ஸ்ட்ரெஸ் இந்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் நிலை (உண்ர்வு) ஏற்படுகிறது.
*
இதை குறைக்க என்ன செய்யலாம்?
1. ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரவு உறங்கும் முன் இளஞ்சூடாக பால் அருந்தி பிரகு மனதுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுதல் நலம்.
*
2. உணவு பொருட்களில் எண்ணெய் நெய் குறைக்க வேண்டும். வறுத்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்த்தல் நலம்
*
3. கால்சியம் இயல்பாகவே சூட்டை தரும். ஆகையால் செயற்கையாக இதை எடுத்துக் கொள்ளாமல், பால் தயிர் போன்றவை சேர்த்துக்கொள்ளவும்.
*
4. பாலி பீனால், ஃப்ளேவனாய்ட் இருக்கும் பழங்கள் திராட்சை, பைன் ஆப்பிள் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஈஸ்ட்ரோஜனின் தன்மைகளை கொண்டிருப்பதால் பலனளிக்கும்.
*
5.கொழுப்பு தவிர்த்து அவரைக்காய், மொச்சை, ராஜ்மா அல்லது பொட்டுக்கடலை, கொத்துக்கடலை சேர்த்து சமைக்கலாம். இவற்றில் ஃப்ளேவனாய்ட் அதிகம். இதில்தான் சோய் புரதமும் வருகிறது. ஆனால் சீன பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்சினை நிறைய வர அவர்கள் அதிகம் பன்றிக்கரி உணபதும் காரணமாகலாம் என்று சொல்லப்படுகிறது.
*
6. அதிக நார்ச்சத்து உள்ள பொருட்கள் குறிப்பாக வாழைத்தண்டு, பீன்ஸ் போன்றவை சேர்த்து கொள்வதும் பலன் தரும்.
*
7. சப்பாத்தி செய்யும் போது முழுகோதுமை மாவு,அல்லது ராகி போன்றவை அதிகம் சேர்த்து கொள்வதும் பலன் தரும்.
*
8. நிறைய பேரீச்சை பழங்கள், கீரை சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் இரத்த இரும்பு சத்தை அதிகரித்து, மெனொபாச் நிலையில் அதிக உணர்ச்சி மாறுதல் மற்றும் இரவு வியர்ப்பது, அல்லது உள் காய்ச்சலை தடுக்கும்.
***
மருத்துவ சோதனைகள்:
இனி
1. வருடம் ஒருமுறை மறக்காமல் பாப் டெஸ்ட், மற்றும் மாமாகிராம் செய்து கொள்ளவும்.
*
2. அதே போல போன் டென்சிட்டி பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்றார் போல கால்சியம் சேர்த்துக்கொள்வது முக்கியம்.
*
3. குடும்பத்தில் புற்று நோய் சரித்திரம் இல்லாவிட்டாலும் மாறு பட்ட உணவு முறை, மற்றும் சுற்றுப்புறம் போன்றவை நம் புற்று நோய் வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.
*
4. நம் ஊரில் பெண்கள் ஏதேனும் உடல் உபாதை இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வதே இல்லை.
*
5. ஆனால் மாதவிலக்கு நின்றபின் வருடம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரிடம் செல்வது அவசியம்.
*
signs and Symptoms of Menopause
http://www.ehow.com/video_4400906_the-signs-symptoms-menopause.html
*
நன்றி தேன்துளி
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment