Sunday, April 3, 2011

பற்களின் பாதுகாப்பு: கேள்வி பதில் வடிவில்...

- Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,





பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் உணவுகளை குண்டூசியால் குத்தி எடுக்கலாமா?

குண்டூசி, ஊசி போன்றவைகளால் குத்தி எடுக்கக் கூடாது. ஒரு நூல் கொண்டு இரண்டு பற்களுக்கிடையில் கொடுத்து எடுக்கலாம்.

குண்டூசி, குச்சி, ஊசி போன்றவற்றால் பல் இடுக்குகளைக் குத்தும்போது ஈறுகள் பாதிக்கப் படுவதோடு, நிறைய சந்துகள் உண்டாகி, கிருமித் தொற்றும் அதன் காரணமாக நோய்த் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகா¢க்கின்றன.

***


பற்களில் ஏன் கூச்சம் வருகிறது? எனக்கு இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்கூச்சம் வருமா? மற்ற எந்த வகைகளில் பற்கூச்சம் வருகிறது?

பற்களை அறிந்தோ அல்லது அறியாமலோ கடிப்பதை பல் வெருவுதல் (Bruxism) என்கிறோம். பல் வெருவுதலால் பற்சிப்பி தேய்ந்து பல்லில் கூச்சம் ஏற்படும்.

பற்கூச்சம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்சிப்பி தேய்வதுதான் எல்லாவற்றாலும் வரும் விளைவு.

கா¢த்தூள், படிகாரம், செங்கற் பொடி கொண்டு பல் துலக்குதல், நகம் கடிப்பதால் பற்கள் தேய்தல், பற்களின் வளர்ச்சி நிலையில் தடை ஏற்பட்டு எனாமல் பாதிக்கப்பட்டுத் தேய்தல் (எனாமல் தேய்ந்துவிடுவதால் கறைகளும் படியும்).

பற்களின் உட்புறத்திலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் அடிபடுதல், கிருமித் தாக்குதல், பல் சொத்தை ஆழமாதல் போன்றவற்றால் எனாமல் பாதிக்கப்படும்போது கிருமிகள் எளிதில் உள்ளிருக்கும் திசுக்களைத் தாக்குதல். இப்படி பல காரணங்களால் பற்கூச்சம் உண்டாகும்.

***


பற்கூச்சைத்ப் போக்க என்ன செய்வது? என்ன மாதி¡¢யான சிகிச்சைகள் இருக்கின்றன?

எனாமல் தேய்ந்திருந்தால் பற்களின் நிறத்தில் ரெசின் பொருட்களைப் பயன்படுத்தி எனாமலைப் பூசும் முறைகள் நடைமுறையில் உள்ளன.

பாதிப்பின் அளவு மற்றும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சைகள் இருக்கும்.

***


உடலிலேயே மிக உறுதியான பகுதி எது?

கண்டிப்பாக பல்லின் எனாமல்தான் உடலின் உறுதியான பகுதி.

***


எனது பற்களின் மேற்புறத்தில் கறைகள் படிந்து அருவருப்பாக உள்ளது. என்னதான் தேய்த்துத் துலக்கினாலும் போவதில்லை. இவற்றை எப்படிப் போக்குவது?

பற்களில் தோன்றும் கறைகள் வெளியிலிருந்தால் மிகவும் சுலபமாகப் போக்கலாம்.

ப்ளீச் எனப்படும் வெளுப்பூட்டும் முறையில் சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம்.

உங்கள் பற்களை அச்செடுத்து அதற்கு ஏற்ப உறை செய்து அதில் ப்ளீச் செய்வதற்கு பயன்படும் மருந்தைத் தடவி, பற்களில் பொருத்திவிட்டால் சில நாட்களிலேயே கறைகள் நீங்கிவிடும்.

ரூட்கெனால் எனப்படும் வேர்ச்சிகிச்சை செய்த பற்களுக்கும் ப்ளீச் முறையில் பற்கறைகளை நீக்கலாம்.

***


வெற்றிலை பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகுமா?

கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகும். இது தவிர, புகைத்தல், மருந்துகள், வாயை சுத்தம் செய்யும் மருந்துகள், ஆஸ்பி¡¢ன், அம்மோனியா, குளோ¡¢ன், வாய்ப்புற்று நோய்க்காக அளிக்கப்படும் ரேடியக் கதிர்வீச்சு ஆகியவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும்.

இதை உடனடியாகக் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த நாளங்கள் வி¡¢வடைந்து இரத்த ஒழுக்கு ஏற்படும்.

நாட்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஈறு நீலம் கலந்த சிவப்பாகவும், தொட்டால் வலிக்கும் தன்மை கொண்டதாகவும் மாறும்.

***


என் பற்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்? பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?


பற்களின் இயல்பான நிறமே இளம்-மஞ்சள்தான்; பலர் நினைப்பது போன்ற தூய வெள்ளை நிறமல்ல!

பற்களின் வளர்ச்சி மற்றும் பற்கூழின் தன்மையைப் பொறுத்தே அவற்றின் நிறம் அமைகிறது. பற்களை நன்றாக துலக்கி சீராக வைத்துக்கொண்டால் அவைகளின் இயற்கை நிறத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.

***


பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை சுயமாக நீக்கிக்கொள்ளலாமா? டாக்டா¢டம் போக வேண்டுமா?

பழக்கங்கள், தொழில்கள் நோய்கள், கர்ப்பக் காலத்தில் தாயார் உட்கொண்ட மருந்து, மாத்திரைகளால் பற்களில் கறை படிவதே ஆகும். இதில் இரண்டு வித கறைகள் உள்ளன.

வெளிக்கறைகள், உட்புறக் கறைகள்.

வெளிக்கறையை துலக்கிகள் மற்றும் வாய்க்கொப்பளிப்பு மருந்துகள் மூலமாகவும் சுலபமாக கரைத்துவிடலாம்.

உட்புறக் கறைகளை நீக்குவதற்கு சிரமம் இருக்கும் இதற்கு பல் மருத்துவா¢ன் உதவி கட்டாயம் தேவைப்படும்.

***


பலவிதமான பழக்கங்கள் மற்றும் நோய்களின் பாதிப்பினால் பற்களின் நிறம் மாறும் என்பது உண்மையா?

உண்மைதான். புகைத்தல் மற்றும் புகையிலைப் பயன்பாடு தவிர, சில பழக்கங்கள் தானாக வரக்கூடியவை.

இவை பற்களில் கறையை உண்டாக்கும் என யாரும் நினைப்பது இல்லை. இதைப் பற்றி நீங்கள் தொ¢ந்துகொள்ள வேண்டும் என்பதால் வி¡¢வாகவே கூறுவிடுகிறேன்.

பழக்கங்கள் :

புகையிலை போடுவது, புகைப்பது ஆகிய பழக்கத்தால் பற்கள் கறுப்பு அல்லது காவி கலந்த கறுப்பு நிறமாக மாறி விடுகிறது. இந்த நிறமாற்றம் பற்களின் மீதும், பற்சிப்பியின் மீதும் பதிந்து அருவருப்பான தோற்றம் தரும். வாயிலும் நிரந்தரமான துர்நாற்றம் வீசும்.

*


தொழில்கள் :

சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் தொழிற்கருவியை பற்களில் கடித்துக்கொள்வதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இதன் காரணமாக பற்களின் மீது கறைகள் படியும்.

உதாரணமாக,

தச்சுத் தொழிலாளர், செப்பு உலோகத்தொழிலாளர், செம்பாலான இசைக்கருவிகளை இசைப்போர், தையலர்கள் போன்றவர்கள் பெரும்பாலும் தங்கள் பற்களில் கருவிகளைக் கடித்துக்கொள்வதால் பற்களில் பச்சை நிறக் கறை இருப்பதைக் கூறலாம்.

*


மருந்து மாத்திரைகள் :

இரும்புச் சத்துள்ள மருந்துகளால் கருப்பு நிறக் கறையும், மாங்கனீசு கலந்த வாய்க்கொப்பளிப்பு மருந்துகளால் இளங் கருப்பு கறைகளும், ஆஸ்பி¡¢ன் மற்றும் காசநோய் மாத்திரைகளால் மஞ்சள் நிறக் கறைகளும், வெள்ளை நைட்ரைட் திரவம் போன்ற மருந்துகளால் பழுப்பு மற்றும் சிவப்பு நிறமும் தோன்றும்.

ஈயம் கலந்த பற்பொடியால் மஞ்சள் நிறக் கறையும், சாம்பல் உமிக்கா¢யைக் கலந்து பல் துலக்கினால் கருப்பு நிறக்கறையும் தோன்றும்.

*


நோய்கள் :

கிருமிகளால் பற்கூழ் பாதிக்கப்பட்டு அங்குள்ள இரத்தக் குழாய்கள் சிதைந்து அழுகி இறந்துவிடும் போது பற்களுக்குள் கரும்பழுப்பு நிறம் ஏற்படுகிறது.

தந்தினிக் குழல்கள் பாதிக்கப்படும்போது பற்குழியில் மாற்றம் ஏற்பட்டு இரத்தக்குழாய்களும் புரத நார்களும் பெருமளவுக்கு பற்குழியில் நிரம்பிவிடும். இதனால் பல்லின் உட்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தொ¢யும்.

*


ப்ளூரைடு :

பற்கள் வளரும் பருவத்தில் ப்ளூரைடு கலந்துள்ள நீரைப் பருகுவதால் காவி நிறத்தில் உட்கறை உண்டாகிறது.

*


பாரம்பா¢யம் அல்லது வேறு காரணங்களால் தந்தினி தாறுமாறாக அமைந்து குழிகள் தோன்றி பற்கூழின் இரத்தக் குழாய்கள் சிதைவதால் பல் மஞ்சள், சாம்பல் அல்லது நீல நிறமாக காணப்படும்.

பாரம்பா¢யக் குறைகளால் பற்சிப்பியில் வளர்ச்சியின்மை, பல் முளைத்த பிறகு பற்சிப்பி தேய்ந்து பற்கள் செம்பழுப்பு காவி அல்லது மஞ்சள் நிறத்தில் செம்புள்ளிகள் தோன்றும்.


***

நன்றி மார்டன் தமிழ் வெல்டு.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment