Sunday, April 3, 2011

ஏன் தலையில நீர் கோத்துக்குது

பாட்டியின் சபை களைகட்டி யிருந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறு பிள்ளைகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.



( இதில் இருந்த கதைகளை ஓரளவுக்கு நீக்கி விட்டேன் )

“சித்த வைத்தியம் படிக்கப்போறேன் பாட்டி...”

“பலே.. பலே... பரவால்லயே... என்னப்போல கிழங்கட்டைக இருக்குற வரைக்குந்தான் இந்தமாதிரி அனுபவ வைத்தியங்க இருக்கும்.. எங்க காலத்துக்கப்புறம் எல்லாரும் இங்கிலீசு மருந்துக்கு போயிடுவாங்கன்னு மனசுக்கு வேதனையா இருந்துச்சு.. ஒங்களமாதிரி ஒரு சில புள்ளைக இந்த சித்த வைத்தியத்த படிச்சி காப்பாத்துறத நெனச்சா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடியம்மா...”

“நல்லது பாட்டி.. நீங்க அனுபவத்துல செய்யறீங்க.. நாங்க இனிதான் படிச்சி.. அனுபவப்பட்டு செய்யணும். ஆனாலும் ஒங்ககூட போட்டி போட முடியுமா.. கிண்டல் செய்தாள் அந்த பெண்..”

“ஆமாண்டி... அப்படின்னா பேசாம எங்கிட்ட வந்து தினமும் படிச்சிக்கிட்டுப் போ..

“கண்டிப்பா பாட்டி.. நா உங்கக்கிட்ட நெரையா தெரிஞ்சிக்கணும்... கண்டிப்பா வந்து சந்தேகம் கேப்பேன்.. நீங்க சொல்லணும்..”

“கண்டிப்பா செல்றேன் தாயி.. ஆமா உம் முகமெல்லாம் என்ன இப்படி பளபளன்னு நீர்க்கோத்த மாதிரி இருக்கு..”

“அட.. கண்டுபுடிச்சிட்டீங்களே.. பாட்டின்னா சும்மாவா...”

“ம்.. நான் எப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குது பாட்டி.. ஏன்னு தெரியல...”

“அதுசரி...

டாக்டருக்கு படிக்கப்போறவ இப்படி நோஞ்சானா இருக்கலாமா... நீ ஆரோக்கியமா இருந்தாத்தானே உன்கிட்ட வைத்தியம் பண்ணிக்க நாலு பேரு வருவாக...”

“பாட்டி.... கிண்டல் பண்ணாம ஏன்னு சொல்லுங்க பாட்டி..”

“ம்.. சொல்றேன் கேட்டுக்க...”

“...தலையில நீர் கோத்துக்குறதுக்கு தலை ஈரம் காயாம இருக்குறது மட்டும்தான்னு ரொம்ப பேரு தப்பா நெனச்சிக்கிட்டு இருக்காங்க.. நிச்சயமா அது இல்ல.. குடல் புண்தான் முக்கியக் காரணம். நேரத்துக்கு சாப்பிடாம இருந்துட்டு, நேரம் தவறி சாப்பிடுறது.. இதுனால குடல்ல புண் உண்டாயி .. அது ரணமாயி உஷ்ணத்த உண்டாக்கும்... இந்த உஷ்ணத்தால நீரு சிரசுக்கு ஏறிக்கும்.. அதுக்கப்புறம் நீ எப்போ தலை குளிச்சாலும் உள்ளே இருக்கும் நீரோட சேந்துக்கும்..”

“இதுக்காகத்தான்

மூலத்தில் சூடிருந்தால் மூக்குதனில் நீர்

வடியும் -னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..”

“அதுக்கு மொதல்ல சாப்பாட்டு முறைய ஒழுங்கா வச்சிக்கணும்.. நேரத்துக்கு சரியா சாப்பிட்டாலே இந்த மாதிரி பிரச்சன வராது.. மலச்சிக்கல் இல்லாம பாத்துக்கணும்..”

“நீங்க சொல்றது சரிதான் பாட்டி.. பப்ளிக் எக்ஸாம் ங்கறதால சீக்கிரம் சீக்கிரமா பள்ளிக்கூடம் போக வேண்டியிருக்கு.. அதுனால காலயில சாப்பிட முடியல.... மத்தியானமும் டெஸ்டு, பிராக்டிகல்னு லேட்டாயி சாப்பிடறேன்.. இப்பதான் புரியுது பாட்டி...”

“இதுக்கு எதாச்சும் மருந்துசொல்லுங்க பாட்டி..”

“ம்... ம்... இப்ப புரியுதா.. எதுக்காக சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு தலமூச்சா அடிச்சுக்கிறாங்கன்னு.. சரி சரி.. மருந்து சொல்றேன்.. கவனமா கேட்டுக்கடியம்மா...”

“துளசி, கறிவேப்பிலை, நன்னாரி வேர், கொத்தமல்லி கீரை, சீரகம் இது எல்லாத்தையும் 1 கைப்பிடி அளவு எடுத்து நல்லா காயவச்சி லேசா எண்ணெய் போடாம வறுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு தெனமும் காலைலயும், சாயந்திரமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா இந்த மாதிரி பிரச்சன வராது...”

“வாரம் ரெண்டு தடவ எண்ணெ தேச்சி குளிக்கணும்..”

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்ட அந்த பெண் உற்சாகத்துடன் பாட்டியைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு..

“வரேன் பாட்டி.. இனிமே அடிக்கடி வருவேன்.. நா கேக்குற சந்தேகத்துக்கெல்லாம் நீங்க சரியா எனக்கு சொல்லிக்கொடுக்கணும்...” என்று ஓடிப்போனாள்.

தானும் ஒரு வாத்தியாராகப் போவதை நினைத்து மனதுக்குள் பெருமிதம் கொண்டாள் பாட்டி.

***
நன்றி ஹெத்து சாய்ஸ்.
***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment