courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, February 23, 2011
நம்பிக்கை
சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப்பெண் அமர்ந்து,மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான்.அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார்.அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,''நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா?இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர்.மது அல்ல.புட்டி மட்டும் மது இருந்த புட்டி.''சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.ஜுன்னேய்த் கூறினார்,''இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது.நீ பிற சீடர்களைப்போல நடக்க முயற்சிக்கிறாய்.கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ,எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.உனது அன்பு ஒரு முயற்சி.உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது.இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''
Labels:
ஓஷோ கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment