புற்று நோயாளிகள் யோகாசனம் செய்தால் நன்றாக தூக்கம் வரும், உடல் களைப்பு மாறி அதிக சக்தி கிடைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
*
குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த யோகாசனம் நல்ல பலனை அளித்ததாக கண்டறிய பட்டுள்ளது.
*
அமெரிக்காவில் உள்ள ரோச்செஸ்டர் மருத்துவ மையம் என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தினார்கள்.
*
குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் வாரம் 2 முறை வீதம் ஒரு மாதத்துக்கு யோகாசனம் செய்ய வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு நன்கு தூக்கம் வந்ததாகவும், அதிக சக்தியும், புத்துணர்ச்சியும் பெற்றதாகவும் தெரிய வந்தது.
*
இதனால் அவர்கள் தூக்க மாத்திரை உட்கொள்வதை விட்டு விட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
*
யோகாசனம் செய்யாத புற்று நோயாளிகளுக்கு தூக்கம் வருவதில் பிரச்சினையும் இருந்தது, புத்துணர்ச்சி இல்லாமல் எப்போதும் களைப்புற்றும் காணப்பட்டனர்.
*
யோகாசனம் செய்வதால், புற்று நோய் பாதித்தவர்கள் தூக்கம் வருவதற்கு தூக்க மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் வராது என்றும், தங்களது நோயினால் ஏற்பட்ட உடல் களைப்பும், மன அழுத்தமும் குறைகிறது என்றும் பெண் ஆராய்ச்சியாளர் கரென் முடியான் தெரிவித்துள்ளார்.
***
http://linoj.do.am/publ/47-1-0-731
***
"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment