1. "நீங்க 8 மணி நேரம் தூங்கறதே இல்லையா...அந்த "டிவி' பேட்டில சொன்னாரே கேட்கலையா, முதல்ல அதை செய்யுங்க!'
*
2. "நான் அந்த பாரின் மேகசின்லே படிச்சேன்; சூப்பரா போட்டிருக்காங்க, அதை பாலோ பண்ணா ஒபிசிட்டி வரவே வராதாம்!'
*
3. "காய்கறி, பழங்களை தான் சாப்பிடறேன்; அப்படியும் குண்டு கரைய மாட்டேங்குதே; என்னத்த செய்ய...'
*
4. "காலைல எழுந்து ஒரு மணி நேரம் நடக்கிறேன்; போதாக்குறைக்கு அருகம் புல் ஜூஸ் குடிக்கிறேன்; ஆனா தொப்பை கரைய மாட்டேங்குதே...!'இப்படி எல்லாம் பேசுவதும், புலம்புவதும் இப்போதெல்லாம் வாடிக்கை தான்.
*
5. அதற்கேற்ப, ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்களின் அதிரடி ஆய்வு முடிவுகள், நூற்றுக்கணக்கான வெப்சைட் தகவல்கள், "டிவி' பேட்டிகள் , பத்திரிகை தகவல்கள்.
***
அருகம்புல் ஜூஸ் குடிச்சா போதுமா:
நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைப் பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடைபிடிக்கும் விஷயங்களை நாம் கடைபிடித்தால் எக்குத்தப்பாக தான் இருக்கும்.
*
அதுபோல, யார் சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றி, உணவில், பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. பாட்டி வைத்தியத்தை இப்போது பலரும் வாய்க்கு வந்தபடி சொல்லி மக்களை குழப்பியும் வருகின்றனர் என்பதும் வேதனையான விஷயம்.
***
எது முழு ஆரோக்கியம்
தினமும் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதா?
அதிக காய்கறி , பழங்களை சேர்த்துக் கொள்வதா?
8 மணி நேரம் தூங்குவதா?
ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதா?
*
"ஆம், ஆனால் இல்லை' என்கிறார் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர் சூசன்லவ்; "எல்லாம் சரி தான்;
*
ஆனால், முழு ஆரோக்கியம் என்று ஆளாளுக்கு ஏதாவது செய்வதும், கடைபிடிப்பதும் தான் தவறாக இருக்கிறது. ஒவ்வொருவரும் முழு ஆரோக்கியத்துடன் தான் இருக்கின்றனர்;
*
அவர்கள் உணவு, பழக்க வழக்கத்தில் தடம் மாறுவதை திருத்திக்கொண்டால் போதும்; மற்றபடி, அதிகபட்ச மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வாழ்கின்றனர்.
*
அதனால், ஆபீஸ் வேலை போல, உடற்பயிற்சி செய்வதும், காய்கறி, பழங்களை நேரம் தவறாமல் சாப்பிடுவதும் மட்டும் ஆரோக்கியத்தை தராது' என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
***
ஆறில் மட்டும் உஷார்
தூக்கம், மன அழுத்தம், தவிர்ப்பு, சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவு ஆகிய ஆறு மட்டும் சேர்ந்தது தான் முழு ஆரோக்கியமான வாழ்க்கை என்கிறார், அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் அலிஸ் டோமர்.
*
"இந்த ஆறு விஷயங்களை அதிகபட்சமாக கடைபிடிக்க முயற்சிக்க வேண்டாம்; குறைந்த அளவிலும் பின்பற்ற வேண்டாம்; ஆனால், கூடாமல், குறையாமல் சீரான முறையில் கடைபிடித்தாலே போதும்; ஒருவரின் வாழ்க்கை சூப்பர்' தான் என்பது இவரின் கருத்து.
****
இழுக்குதே உறக்கம்
உதாரணமாக, தூக்கத்தை எடுத்துக்கொண்டால், 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதையே அமெரிக்க நிபுணர்கள் இன்னும் ஏற்கவில்லை. "ஒருவர் 5 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலோ, 7 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலோ தான் சிக்கல்;
*
ஒவ்வொருவரின் உறக்க முறையும் வித்தியாசமானது; ஆனால், போதுமான அளவுக்கு தூக்கம் இருந்தாலே போதும்; வலுக்கட்டாயமாக திணிக்கவோ, உறக்கத்தை குறைக்கவோ கூடாது' என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.
***
பாத்திரம் கழுவுங்க
நீங்க வீட்டை சுத்தம் செய்ய மனைவிக்கு உதவுவீர்களா? பாத்திரம் கழுவி தருவீர்களா? தோட்டத்தையாவது சுத்தம் செய்வீரா? சரி, இதை விடுங்க, கார், பைக்கையாவது விடுமுறையில் சுத்தம் செய்வீங்களா?
*
இப்படி வீட்டு வேலையில் ஒத்துழைப்பதே உடற்பயிற்சி தான். அதை விட்டு "ஜிம்'முக்கு சென்று உடல் குண்டு குறைய வேண்டும் என்று வியர்வை சிந்துவது சரியா? என்று கூட பலருக்கு தோன்றலாம்.
*
"ஆம், இதெல்லாம் கூட பயிற்சி தான்; இதனால் தான் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; நன்றாக தூக்கம் வரும்; நல்லா சாப்பிட தோன்றும். இதெல்லாம் தெரியாமல் காசு கொடுத்தால் தான் உடற்பயிற்சி என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது' என்று சொல்கின்றனர்;
*
யார் தெரியுமா? கலிபோர்னியா பல்கலைக்கழக வாழ்வியல் நிபுணர் பெர்ரட் கூனர். ஹூம், அவங்களுக்கு தெரியுது; நமக்கு புரிய மாட்டேங்குதே.
***
ஆரோக்கிய வாழ்வுக்கு "டிப்ஸ்'
1. நமது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக அவசியம். தண்ணீர் குடிப்பது குறித்த சில புதுமையான தகவல்கள்...
*
2. தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.
*
3. குளித்த பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
*
4. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஜீரணத்திற்கு நல்லது.
*
5. தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, நள்ளிரவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க உதவும்.
***
நன்றி தினமலர்!
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment