Monday, April 25, 2011

உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்

நமது உடல் பாகங்களில் நமது முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். இவை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நாம் உணர்கிறோம்.



ஆனால், கால்கள் என்ன செய்கிறது என்பதை நாம் உணர மறந்து விடுகிறோம். நம் உடலின் பாகம் மூளையை விட்டு எவ்வளவு தள்ளி இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் அவற்றின் செயல்களைப் பற்றி அறியாமல் இருந்து விடுகிறோம்.

*

சிலர் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல முகத்தை மாற்றி வைப்பார்கள்.

*

ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். கால்கள் தொடர்ந்து தாளமிட்டுக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடுவதற்கு தயாராக உள்ள மனோபாவத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். முகத்தை மட்டும்
நடிக்கப் பழக்கியவர்கள், கால்கள் என்ன செய்கிறது என்பதை கவனிப்பதில்லை.

**

நடக்கும் விதம்

இளமையாக ஆரோக்கியமாக நடப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்பதைக் காட்டவே இப்படி நடக்கிறார்கள். ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது செயல்திறனின் வேகத்தைக் காட்ட இவ்வாறு நடக்கிறார்கள்.

**

கால்கள் சொல்லும் உண்மைகள்

பால் எல்க்மேன் என்ற உளவியல் அறிஞர் ஒருவர் பொய் பேசும்போது ஒருவரது கால்கள் எவ்வாறு காட்டிக்கொடுக்கின்றன என்பது பற்றி ஆராய்ச்சி செய்தார். இதற்காக சில நிர்வாகிகளை அழைத்து அவர்களைப் பொய் பேச வைத்தார். அவர்கள் பொய் சொல்லும்போது, பாதங்களை உணர்வின்றி வேகமாக அசைத்தனர்.

*

இன்னும் பலர் முகபாவங்களை பொய்யாக மாற்றி, கை அசைவுகளையும் கட்டுப்படுத்தி நடித்தனர். ஆனால், அவர்கள் அனைவருமே தங்கள் பாதங்கள் என்ன செய்கின்றன என்பதை அறியாமல் இருந்தனர். பொய் பேசுபவர்களின் முழுஉடலையும் பார்த்தோமானால், அவர் பொய் சொல்வதைக் கண்டுபிடித்து விடலாம்.


***

கால்களை ஒன்று சேர்த்தல்

ஒரு இடத்தில் தங்கலாமா அல்லது வேண்டாமா என்று எந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையான மனநிலையை வெளிப்படுத்தும் இந்த நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறது.

*

ஆண்-பெண் சந்திப்புகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த நிலையில் நிற்பார்கள். மேலதிகாரிகள் முன்னால் இளம் அதிகாரிகளும், ஆசிரியர்கள் முன்னால் மாணவர்களும்
இவ்வாறு நிற்பார்கள்.

***

கால்களை விரித்து நிற்பது

சிலர் ஆங்கில எழுத்தான `வி' வடிவில் கால்களை விரித்து நிற்பார்கள். இவர்கள் தரையில் கால்களை வலுவாக ஊன்றி தாங்கள் எண்ணத்திலிருந்து எப்போதும் விலகிச் செல்வதில்லை என்பதை வெளிப்படுத்துவர். ஆண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதால், விளையாட்டு வீரர்களும், திரைப்படத்தில் கதாநாயகர்களும் இதுபோன்ற நிலைகளில் நிற்பதைக் காணலாம்.

***

பாதத்தை முன் வைப்பது

ஒருவர் உடனடியாக என்ன செய்யப்போகிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நாம் எந்தத் திசையில் செல்லப் போகிறோம் என்பதை முன்னிருக்கும் காலின் திசை தான் காட்டுகிறது. இது நம் மனம் எந்தப் பக்கம் செல்ல விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.




***
நன்றி - மாலை மலர்.
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment