Monday, April 25, 2011

கேன்சர், நீரழிவு தடுக்க சைவ உணவுகள்

மாரடைப்பு, கேன்சர், டயபடீஸ் (நீரழிவு) உடல் பருமன் ஆகியவற்றைத் தடுக்க சைவ உணவுகள் சிறப்பாக உதவுவதாக அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு சங்கத்தின் (ஏடிஏ) சார்பில் பால்டிமோர் வெஜிடேரியன் ரிசோர்ஸ் குரூப், ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் இணைந்து உணவுப் பழக்கமும் உயிரைப் பறிக்கும் நோய்களும் பற்றி விரிவான ஆய்வு நடத்தியது.

**

அதன் முடிவுகள் பற்றி உணவியல் துறை பேராசிரியர் வின்ஸ்டன் கிரெய்க் கூறியதாவது:



சைவ உணவுகள் எப்போதுமே ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழியாக உள்ளன. ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கின்றன. அதன்மூலம், இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதன் மூலம் உயர் மனஅழுத்தம் தவிர்க்கப்பட்டு, 2ம் வகை டயபடீஸ் வருவது தடுக்கப்படுகிறது.

*

அத்துடன், ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான பல சத்துக்கள் சைவ உணவில் அதிகம் நிறைந்துள்ளன. நார் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி, இ, போலேட், கரோடனாய்ட், ப்ளேவனாய்ட் ஆகியவை சைவ உணவில் அதிகம். பாலன்சான சைவ உணவுப் பழக்கத்தை கொண்டவர்களுக்கும், வித்தியாசமான உணவுப் பழக்கத்தை கொண்டவர்களுக்கும் ஆரோக்கிய நன்மைகள் வேறுபடுகிறது.

*

குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தையின் ஆரோக்கியத்தில் சைவ உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதில் சைவ உணவுகள் அதிகம் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள், சோயா, புரோட்டீன், கால்சியம், விட்டமின் டி, கே, பொட்டாசியம் ஆகியவை எலும்புகள் நலனில் அதிக நன்மை செய்கின்றன என்றார்.


***
thanks "லங்காசிறீ"

***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment