Monday, April 25, 2011

அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'!

நியூயார்க், அக். 24: அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள்.

*

ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

*

அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

*

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்டநாள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையை கண்டறிந்திருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

*

எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

*

அவர்களது கண்டுபிடிப்பின்படி, அழுகிய முட்டையை வைத்து ரத்த அழுத்தத்துக்கு மருத்துவம் மேற்கொள்ளும் காலமும் வரலாம். அப்போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல், மயக்கத்துக்கும் மருந்து, மாத்திரைகளை நாம் தயாராக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.


***

thanks dinamani
***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment