செய்முறை:
*
இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் மாற்றிப் போடவும். கால்மூட்டுகள் இரண்டும் தரைடைத் தொடவேண்டும். குதிகால்கள் இரண்டும் வயிற்றின் அடிப்பாகத்தை தொடும்படியாக அமைக்கவும்.
***
முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். சில பேர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது.
***
ஒவ்வொரு காலாக தொடையில் போட்டுப் பழகவும். நாளடைவில் வந்துவிடும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது. வெகு நேரம் இருக்கலாம்.
***
1 முதல் 3 நிமிடம் இருக்கலாம். மேஜை சாப்பாடு உள்ளவர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது. ஒரு வேளையாவது தரையில் சாதாரணமாக உட்கார்ந்து சாப்பிட்டால் இவ்வாசனம் இலகுவில் வந்துவிடும்.
***
பலன்கள்:
*
அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். நன்றாக பசி எடுக்கும். வாதநோய் தீரும். வழிபாடு, ஜபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது. நாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.
***************************************
*
உட்கட்டாசனம்
*
செய்முறை:
*
நேராக நின்று கொண்டு காலை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி கைகளை நேராக நீட்ட வேண்டும். உடல் பூராவும் இளக்கமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி பாதி உட்கார்ந்த நிலையில் முடிந்த நேரம் நிற்க வேண்டும். கால் மூட்டில் இலேசாக வலி வரும். அப்போது உட்கார்ந்து விட வேண்டும்.
***
பலன்கள்:
*
ஆசனம் செய்வதற்கு முன்னால் உட்கட்டாசனத்தை முதலில் செய்வதால் உடலில் உள்ள நாடி நரம்புகள் இளக்கம் கொடுக்கும். அடிவயிறு, தொடைப்பகுதி, பிருஷ்ட பாகம் இளக்கம் கொடுக்கும். பிற ஆசனங்கள் செய்ய உடல் இலகுவாக அமையும். கால் மூட்டு வீக்கம், மூட்டில் நீர் தேங்கல், வலி, உளைச்சல், வாதம் நீங்கும். 5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும். ஒரு முறை செய்தால் போதுமானது.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment