தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை! குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்!
இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது!
பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு. மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல! தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி! மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன்.
இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது!
பொட்டாசியம் உப்பிற்காக தினை மாவு, பீன்ஸ், வாழைப்பழங்கள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு வந்தாலும் ஸ்டிரோக் அபாயத்தை தவிர்க்க முடியும். போனஸாக சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இயங்கும்.
இத்துடன் உடலுக்கு வலிமை சேர்க்க கால்சியமும், பாஸ்பரஸ் உப்பும் அதிக அளவில் உள்ள சோயா பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, ஆட்டு ஈரல், தேங்காய், தினை மாவு முதலியவையும் நன்கு உணவில் சேர்க்க வேண்டும்.
தினை மாவுருண்டை செய்வது எப்படி?
தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்! கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும். ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்! அப்படியே மாவு போல உருட்டி, அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து!
நன்றி கந்தர் அலங்காரம்.
murugaperuman.blogspot.com/feeds/posts/default?alt=rss - 328k
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment