Wednesday, March 16, 2011

காளான் அல்லது மஷ்ரூம்…






முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் கிடைத்து வந்த இலவச உணவு காளான்கள். இந்த காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள் இருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.













***













பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார் 64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன் பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.













***













சீனாவில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் நீட்சி பல்வேறு வடிவங்களில் தொடரும் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.காளானில் புற்றுநோயை எதிர்க்கும் குணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் விளைவாகவே இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.









***























கான்சருக்கு அளிக்கப்படும் மருந்துகளைப் போலவே காளானும் செயல்படுகிறதாம். அதாவது கான்சரை உருவாக்கும் ஆஸ்டிரோஜென் ஹார்மோனை தடுக்கும் அல்லது மட்டுப்படுத்தும் திறன் காளான்களுக்கு உண்டாம்.













***













கான்சர் எதிர்ப்புக்கும், காளானுக்கும் இடையேயான தொடர்பு சமீபகாலமாகவே பல்வேறு ஆராய்ச்சிகளை தூண்டி விட்டிருக்கிறது. அதில் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

















***

















அதாவது, காளான் சூப் தயாரித்துக் குடிப்பதனால் மார்பகப் புற்று நோயை குணப்படுத்த முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சி.ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.













***

















காளான்களை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.








நன்றி byசேவியர்



sirippu.wordpress.com/2009/03/25/mushroom

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment