ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.
*
சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
1. பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.
*
2. மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.
*
3. காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.
*
4. பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும்.
*
5. அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.
*
6. பல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல.. வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
*
7. ஈறு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் குறையும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
*
8. அறுவை சிகிச்சை செய்வதற்குக் கூட சொத்தைப் பல் இருப்பவர்களுக்கு சில அறுவை சிகிச்சைகளை செய்ய மாட்டார்கள். சொத்தைப் பல்லை நீக்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.
*
9. சாப்பிடும் போது நன்கு மென்று திண்பதால் உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதேப்போல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்து அந்த நீரை துப்பிவிடக் கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.
*
10. அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை பாக்கு போடுவார்கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பிவிடக் கூடாது.
*
11. தாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை கண்டிப்பாக வரும். அதனை தவிர்க்க முடியாது. அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால் குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
*
12. பல்சொத்தைக்கு சர்வாங்காசனம், சிரசாசனம் செய்தால் பிரச்சினை குறையும். சிரசாசனம் செய்யும் போது பல் சொத்தை மாறுவது கண்கூடாகத் தெரியும். பொதுவாக பற்களை பிடுங்கக் கூடாது என்பார்கள். கீழ்ப் பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்கவேக் கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.
*
13. தற்போது சொத்தைப் பற்களின் வேர்களுக்கு சிகிச்சை அளித்து சொத்தையை சரி செய்யும் முறை வந்துள்ளது. அதில்லாமல் ஒரு பல்லைப் புடுங்கிவிட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்துவதும் நல்லது. ஏன் எனில் கீழ்ப்பல்லைப் பிடுங்கிவிட்டால் அதனால் மேல் பல் இறங்கும் நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவே செயற்கைப் பல் பொருத்தப்படுகிறது.
*
14. பற்களுக்கு பச்சைக் காய்கறிகளை அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
*
15. ஆயில் புல்லிங் பற்றி:
ஆயில் புல்லிங் என்பதும் பற்களுக்கு நன்மை தரக்கூடியதுதான். வெறும் நல்லெண்ணையில் கூட செய்யலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நல்லது.
***
நன்றி வெதுப்னியா.
***
***
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment