Friday, April 1, 2011

கருப்பட்டி ( வெல்லம் ) நினைவில் இருக்கிறதா?

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.



1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்

*


2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.



இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம்.

*

நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள்.

*

நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள்.

*

நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ?

*

அதனால் இந்த தலை முறையினாராவது நம் பிள்ளைகளுக்கு அதனை உணவு மூலம் உடலில் சேர்த்து பழக்கினால் அடுத்த தலை முறை கட்டாய்ம் இதனை நினைவில் வைத்துக் கொள்ளும்.


***


குழந்தைக்கான இயற்கை டானிக்..



1. கடலை மிட்டாய், இதுப்போல் பர்fயி அணைத்தும் உடலுக்கு வலுசேர்க்கும்.

*

2. தினமும் வாழைப்பழம், இரவு உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை, ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த கஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு, பசும்பால் இவையெல்லாம் உடலின் எடையைச் சீராகப் பராமரிக்கும்.

*

3. குழந்தைக்கு நல்ல போஷாக்கையும் தரும். இதை தொடர்ந்து கொடுத்து வந்தாலே மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

***

by-சக்திக்குமரன் விஜயராகவன்.
நன்றி itsmytamil.blogspot.com

நன்றி கீற்று.

***
"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment