Friday, April 1, 2011

பல் சொத்தை: பாதரசம் பயன்படுத்த தடை!

பல் சொத்தையை அடைக்க பயன்படும் பாதரசம் உடலில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சிகிச்சை முறைக்கு விரைவில் தடை விதிக்கப்படவுள்ளது.



பல் மருத்துவத்துறையில் பாதரசம் முக்கியப் பங்காற்றுகிறது. பல் சிதைவு மற்றும் பல் சொத்தைகளை நிரந்தமாக அடைக்க பாதரசம், வெள்ளி கலந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

*

இந்த கலவை மூலம் பல் சொத்தையை அடைப்பதால், பாதரசம் நரம்பு வழியாக ஊடுருவி உடலில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

*

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களும், வயிற்று வளரும் சிசுவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

*

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து நுகர்வோர் குழுக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

*

இதன் காரணமாக, பாதரசத்தை பயன்படுத்தி பல் சொத்தைகளை அடைக்கும் சிகிச்சை முறைக்கு விரைவில் தடை விதிக்கப்படவுள்ளது.

*

இதுதவிர, மருத்துவத் துறையில் பாதரசத்தை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட உள்ளன.


***

http://in.tamil.yahoo.com/Health/News/0806/06/1080606027_1.htm

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment