Friday, April 1, 2011

முட்டை ஆரோகியமான உணவா இல்லையா?

ஆரோக்கிய உணவு முட்டை:



1. இயற்ர்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணிக்கும் புரோட்டீன்களும், சத்துப் பொருட்களும், ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன.
*
2. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது.
*

3. முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவுக்கு வரும்.
*
4. இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டையும் பற்றி தெளிவாக அறிய வேண்டும்.
*

5. கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது.
*
இந்த இரண்டுமே தவறு.
*
6. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது.
*
7. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி, இது ஆட்டோமேடிக்காக நடந்து கொண்டே இருக்கும்.
*
8. செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும்.
*
9. அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ, இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது.
*
10. அதன் பெயர் lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ, அதே மஞ்சள் கருவில் தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
*

11. ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம்.
*
12. அவர்கலை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் (cholesterlo responders) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும்.
*
13. ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது.
*
14. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது.
*

15. முட்டையின் மஞ்சள் கருவில் arachadonic acid என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.
*
16. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம்.
*
17. இந்த சிக்கலை சமாளிக்க arachadonic மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது.
*
18. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவு தான்.

- கூடல் தளம்.

***

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?



1. முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதையும் அளவுக்கு அதிமாகச் சாப்பிட்டால் ஆபத்து என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.
*

2. தினசரி முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவைப் பின்பற்றி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
*

3. அதன் இறுதியில், அமெரிக்க ஆய்வுக்கு நேர்மாறான முடிவு தான் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களுக்கு கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

4. சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட, அது அவர்களின் நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
*

5. பெண்கள் தினமும் ஒரு முட்டையோ, அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான முட்டைகளைச் சாப்பிட்டாலோ, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 சதவீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
*

6. அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரிய தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

*

-இன் தமிழ் யாகுதளம்.

* *

லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது:
1. வாரத்துக்கு 7 அல்லது அதற்கு அதிகமாக முட்டை சாப்பிட்ட நடுத்தர வயதினருக்கு இதய நோய் அபாயம் 23 சதவீதம் அதிகரித்ததாக ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
*

2. நம் நாட்டில் 'பூரண ஆரோக்கியத்துக்கு தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கள்' என்று அரசு மற்றும் தனியார் கோழிப்பண்ணை விளம்பரங்களை அடிக்கடி பார்த்திருக்கின்றோம்.
*

3. முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். சரி. ஆனால் எல்லாருக்குமே இது பொருந்துமா என்பதுதான் கேள்வி.
*

4. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் சுமார் 220 மி.கி. கொலஸ்டிரால் இருக்கிறதாம். அப்படியென்றால் இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள் முட்டை சாப்பிடக் கூடாதல்லவா? என்று கேட்பது புரிகிறது.
*

5. அப்படிப்பட்டவர்கள் முட்டை சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாகி மாரடைப்புகூட ஏற்படலாமாம். தினசரி ஒரு முட்டை அல்லது வாரத்துக்கு 7 முட்டைக்கு மேல் சாப்பிட்ட நடுத்தர வயதினருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் 23 சதவீதம் கூடுதலாக இருந்ததாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*

6. ஆனால் இதெல்லாம் கட்டுக்கதை. முட்டை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
*
7. உணவு மூலம் உடலில் சேரும் கொலஸ்டிரால் எளிதில் ஜீரணிக்கப்பட்டுவிடும் என்பதால் கவலைப்படவேண்டியதில்லை என்று ஆறுதலாக கூறுகின்றனர்.
*

8. அதே சமயத்தில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவ இதழ் ஊட்டச்சத்து பற்றி வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
*
9. கொலஸ்டிரால் அதிகமுள்ள, குறிப்பாக நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் முட்டை சாப்பிட்டால், அவர்களது பாதிப்பு அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

10. முட்டையை விரும்பி சாப்பிடும் வயதான, குண்டான ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு மது மற்றும் சிகரெட் மீது மோகம் அதிகரிக்குமாம். சிகரெட்டும், மதுவும் இதய நலத்துக்கு ஏழாம் பொருத்தம் என்பதை சொல்லவே தேவையில்லை.
*

அப்படின்னா... முட்டை சாப்பிடலாமா? வேண்டாமா?
*

11. அது பற்றிய உலகளாவிய சர்ச்சை நீடிக்கிறது. இதற்கு குழந்தைகள் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
*

12. வளரும் குழந்தைகளுக்கு தினசரி உணவில் முட்டை சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாக வலியுறுத்துகின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.


*

-தட்ஸ்தமிழ்.

***

அழுகிய முட்டை:





"அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'


நியூயார்க், அக். 24:
1. அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
*

2. முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள்.
*

3. ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
*

4. அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
*

5. எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்டநாள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையை கண்டறிந்திருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
*

6. எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
*

7. அவர்களது கண்டுபிடிப்பின்படி, அழுகிய முட்டையை வைத்து ரத்த அழுத்தத்துக்கு மருத்துவம் மேற்கொள்ளும் காலமும் வரலாம்.
*
8. அப்போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல், மயக்கத்துக்கும் மருந்து, மாத்திரைகளை நாம் தயாராக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
*

http://www.dinamani.com/


***


சீன உணவு வகைகள் (முட்டை ) :




1. முட்டை சத்துள்ள ஒரு உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால், அது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.

*

2. சீனத் தனிச்சிறப்பு மிக்க முட்டை தயாரிப்பு முறை இதுவாகும். இந்தியாவை போல, சீனாவும் உலகில் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும்.
*
3. சீன உணவு வகைகளைத் தயாரிப்பதில் சில வேளைகளில் தேயிலை பயன்படுத்தப்படுகின்றது.

*


இந்த சீன முட்டை சமையல் குறிப்பு அடுத்த பதிவில்.

***

மொத்ததில் "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்ற பழமொழி முட்டை 100% தகும்.

*

முட்டை அளவேடு உண்டு உங்கள் உடலையும் மனமதை காத்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

***

நன்றி கூடல் தளம்.
நன்றி தட்ஸ்தமிழ்.
நன்றி இன் தமிழ் யாகுதளம்.
நன்றி தினமணி.
நன்றி சீன வானொலி.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment