Wednesday, March 30, 2011

மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த ‘SuperBrain Yoga’.



உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

அட, சாதாரணமாணவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் மிக நல்ல பலனைக்கொடுக்கும்.

பிறகு என்ன, நேரம் கிடைக்கும் போது அப்பப்ப தோப்புக்கரணம் போடவேண்டியதுதானே? கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!??

மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?



1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதுபற்றி கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.


இந்த தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.


***

by barthee.
நன்றி பாரதி தளம்.


***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment