Wednesday, March 30, 2011

நோன்ஸ்டிக் பாத்திர சமையல் குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும்

குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்




உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர்.

இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது.


எனவே அவற்றில் சமையல் செய்வது ஒரு பாஷனாக கருதப்படுகிறது. ஆனால், அதுவும் ஒருவகையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

“நோன்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்து தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





அந்த பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் “பேப்ரிக்குகளும் கொழுப்பு சத்தை உணவில் அதிகரிக்கின்றன.


அந்த உணவை சாப்பிடும் குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. லிபோபுரோட்டீனின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

நோன்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க “பெர்புலோரோ அல்சைல் திரவம் பூசப்படுகிறது.

இதன் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.


இந்த ஆய்வை மேற்கு வர்ஜினீயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழு மேற்கொண்டனர்.


***

நன்றி http://www.z9tech.com/

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment