Wednesday, March 30, 2011

தேவையற்ற கலோரி...நல்லதா, கெட்டதா...?

கலோரியால நல்லதா, கெட்டதா...? என்ற கேள்வி இன்னும் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கலோரி பற்றிய மருத்துவ தகவல் அறிவு இல்லாத வரை இதுபற்றி பெரிதாக தெரிந்து கொள்ள முடியாது.



சிலர் வேண்டுமானால், கலோரி பற்றி அரைகுறை டாக்டர் போல ஏதாவது சொல்லலாம். உண்மையில் பார்த்தால், உடல் எடை அதிகரித்தாலே, கலோரியை குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தான் கொள்ள வேண்டும். அதில் சிறிது கூட சுணக்கம் கூடாது. அப்போதும், சில பழங்களை, சில உணவு வகைகளை எல்லாம் சாப்பிட்டு, "நமக்கென்ன வரப்போகுது" என்று சும்மா இருக்கக் கூடாது.

அந்த வகையில் சில உணவு வகைகள், சில அசைவ உணவுகள், சில பழங்கள் எல்லாம் கலோரியை கூட்டுவதுடன், எடையையும் அதிகரித்துவிடும். அதனால், கொழுப்பும் அதிகரிக்கும். இப்படிப் பார்த்தால், கலோரியை குறைத்தாலே, உடல் எடையை சீராக வைக்கலாம்.

அதற்கு தான் வாக்கிங், உடற்பயிற்சி போன்றவற்றுடன், அதற்கு ஒத்துழைக்கும் வகையில், சில உணவு வகைகளையும் தவிர்த்து விட்டு, உடலை பாதுகாப்பது நல்லது தானே.




உணவு தானியம் கலோரி அளவு:

பார்லி - ஒரு அவுன்ஸ் - 88

கார்ன்ப்ளேக்ஸ் - 1 அவுன்ஸ் - 87

சாதாரண மாவு - 1 அவுன்ஸ் - 88

ஓட்மீல் - 1 அவுன்ஸ் - 108

நு‘டுல்ஸ், அரிசி - 4 அவுன்ஸ் - 361

புழுங்கல் அரிசி - அரை கப் - 350

பாஸ்மதி அரிசி - அரை கப் - 330

அசைவ வகைகள்

மீன், மீன் கறி வகைகள் - 100

மாக்சுல் மீன் - 93

இறால் - 89

சிறு கடல்மீன்

(குறைவான கொழுப்பு) - 101

சிறு கடல் மீன்

(அதிக கொழுப்பு) - 211

மாட்டிறைச்சி - 114

சிக்கன் - 109

மாமிசம் - 194

பன்றி இறைச்சி - 114

முட்டை (வாத்து) - 180

முட்டை (கோழி) - 173

ஆட்டு கல்லீரல் - 150

இனி உங்கள் உடலுக்கு தேவையான கலோரியை எடுத்து நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள்.


***

நன்றி தமிழ்கூடல்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment