ஒரு மனிதனின் ஆரோக்கியம், அவன் மூளையின் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது. மூளை சரிவர செயல்படாத அந்த ஒருவன் "முழுமையான மனிதன் இல்லை' என்பது புதுமொழி. மனித உடலில் தலைமை பொறுப்பில் உள்ள மூளை திடீரென செயலிழந்து விடும். இதற்கு "பக்கவாதம்' என்று பெயர். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபடும்போது "பக்கவாதம்' ஏற்படுகிறது. பொதுவாக, 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு "பக்கவாதம்' ஏற்படும். காரணம், வயது அதிகரிக்கும்போது, உடலில் ரத்த உற்பத்தி குறைந்து போகும். இந்திய அளவில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் (சென்னையில் மட்டும் 3000 பேர்) பக்கவாதத்தில் பாதிக்கப்படுகின்றனர். வாய் கோணுதல் அல்லது பேச முடியாதது; கை, கால் இழுத்துக்கொள்வது; ஒரு கண் பார்வை இல்லாதது மற்றும் தலையை அசைக்க முடியாமல் ஒரு பக்கமாக பார்த்து பேசுவது; தலை சுற்றி மயக்கம் வருதல் போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், அடுத்த மூன்று மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவரின் மூளை செயலிழந்து விடும். முன்பெல்லாம், "பக்கவாதம்' வந்தவர்களுக்கு மாதக்கணக்கில் சிகிச்சை அளிக்கப்படும். இப்போது, "திசு பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர்' (டி.பி.ஏ.,)நவீன சிகிச்சையில் பாதிக்கப்பட்டவரை இரண்டு நாளில் குணப்படுத்த முடியும். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், டி.பி.ஏ., சிகிச்சை அளிக்கப்படுகிறது. பக்கவாதம் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில், "அக்யூட் பிரெய்ன் அட்டாக் டீம்' என்ற நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை மூன்று மணி நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தால், டி.பி.ஏ., சிகிச்சை கொடுத்து நோய் சரிசெய்யப்படும்; பாதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் கொண்டு வந்தால், அவர்களுக்கு, "ஆஸ்பிரின்' கொடுத்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து மேற்கண்ட சிகிச்சை அளிக்கப்படும். டி.பி.ஏ., சிகிச்சையில், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சி.டி., ஸ்கேன் செய்யப்பட்டு, அடைப்பு இருந்தால் நீக்கப்படும். ரத்தக் கசிவு ஏதும் இருந்தால், "ஆஸ்பிரின்' மருந்து கொடுக்கப்படும். ஏற்கனவே இதயம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், குடற்புண் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும், "ஆஸ்பிரின்' கொடுக்கக் கூடாது. தொடர்ந்து, "டிரான்ஸ்கிரனியல் டாப்ளர்' கருவியால், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சுருக்கம் ஏற்பட்டிருந்தாலும், அடைப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கப்படும். அதன் அடிப்படையில் மேற்படி சிகிச்சை அளிக்கப்படும்.
YOGANANDHAN GANESAN |
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment