Thursday, March 24, 2011

படித்ததில் பிடித்தது

திரு. வேதாத்ரி மகரிஷி அவர்களின் முத்தான முத்துக்களை கோர்த்து அதை மாலையாக செய்து வேதாத்ரி மகரிஷி அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிரேன்.

நன்றி ஜயா.





1. எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். ஒரு செடியைப் பார்த்துக்கூட வாழ்த்தி மகிழலாம். அவ்வாறு வாழ்த்தும் போது, அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும். அன்பு, அருள், இன்முகம், களை இவற்றோடு கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக, அழகு மிக்கவர் களாக திகழ்வார்கள்.
*

2. தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுவதுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து "வாழ்க வையகம்', "வாழ்க வளமுடன்' என வாழ்த்த வாழ்த்த, அந்த வாழ்த்து அலைகள் உலக மனித சமுதாயத்தின் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து, உலகம் முழுமைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.


*

3. உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்வாழ்க வையகம்!

*

4. உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால்புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,“ஆண்டவன் அருளால் மனதில் அமைதி நிலவுகிறது. உடல்முழுவதும் புத்துணர்ச்சியும், புதுபலமும் தொடர்ந்து நீடிக்கவேண்டும். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்கவேண்டும்” என்று மனப்பூர்வமாக நினைக்க வேண்டும்.
இவ்வாறு நினைப்பது நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் வாழ்த்தாகும்.


*

5. நீங்கள் உங்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக இருக்கவேண்டும். அதற்கு உடல்பலம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மிகவும்அவசியமானவை. நாள்தோறும் உங்களுக்கு நீங்களே இந்த எண்ணங்களைவற்புறுத்தி சிந்திக்கும் போது அவை மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்தமுத்திரைகளைப் பதிக்கிறது. மொத்தத்தில் இது நமக்கு நாமே ஆசி வழங்குவதுபோலத் தான். அப்பதிவுகள் நம் செயல்களில் வெளிப்படத் தொடங்கும்.அதனால், நம் வாழ்க்கை மேம்பாடு அடையும்.

*

6. விழித்திருக்கும் போது மட்டுமின்றி, தூக்கத்திலும் நல்ல எண்ணஅலைகள்சிறந்த பலன்களை நமக்குத் தரும். நாளடைவில் நாம் தன்னிறைவு பெற்றதோடுஅல்லாமல் மனைவி,மக்கள், நண்பர்கள் என்று எல்லாத் தரப்பினரும் நலம்பெற சிந்திக்க வேண்டும். நல்ல மனதோடு எல்லோருக்கும் வாழ்த்து வழங்கும்போது நல்ல சமுதாயம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் கொள்ளும் நட்புறவும்அன்பும் பலப்படுகிறது.


*

7. மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

*

8. மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான்.இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

*

9. அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

*

10. வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

*

11. கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

*

12. தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

*

- வேதாத்ரி மகரிஷி.



***

இவை இந்த பதிவு உங்கலுக்கு பிடித்து இருந்தால், உங்கள் சிந்தனை தூண்டினால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நன்றி.


*


"வாழ்க வளமுடன்"






***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment