Tuesday, March 8, 2011

பாகப்பிரிவினை

விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று  என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment