**********
பயம்தான் நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே,அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியத்தைச் சாதிக்கிறார்கள்.மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
**********
ஒவ்வொருவனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான்.எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான்.இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது.
**********
என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டால் என் துயரத்தை சொல்லி அழக்கூட ஒரு துணையிராது.
**********
நமது காசும் மற்ற காசுகளைப்போல வட்டக்காசுதான்.ஆனால்,மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம்.அவ்வளவுதான்.ஆனால் மனேஜரின்காசில் இருப்பதைவிட நமது காசில் மனித இரத்தம் அதிகம்.நாம் வெறும் காசை மதிக்கவில்லை.அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,நியாயத்தைத்தான் மதிக்கிறோம்.
**********
எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான்பிறக்கின்றன.இவற்றைக் கொண்டு மனதிற்குக் கடிவாளம் பின்னுகிறது வயிறு.மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக,அதைப் பக்குவப் படுத்துவதற்காகவே பழமொழிகள் பயன்படுகின்றன.
**********
எந்தத் தவறானாலும் சரி,அது என்னை பாதித்தாலும்,பாதிக்காவிட்டாலும் அதை மன்னித்து விட்டுக் கொடுக்க எனக்கு உரிமை கிடையாது.இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர் வாழவில்லை.இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கு இழைப்பதை நான் விட்டுக் கொடுத்து விடலாம்:அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால் அதைக் கண்டு நான் சிரிக்கலாம்;அது என்னை சீண்டுவதில்லை.ஆனால் நாளைக்கோ என் மீது பலப் பரீட்சை செய்து பழகிய காரணத்தால் வேறொருவனின் முதுகுத் தோலை உரிக்க அவன் முனையலாம்.ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது.
**********
ஒவ்வொருவனும் அவனவன் வயிற்ரை நிரப்பவே வழி பார்க்கிறான்.அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக் கூட எவனும் விரும்புவதில்லை.
**********
-- தாய் எனும் நாவலிலிருந்து.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment