Saturday, March 26, 2011

ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி




கண்டதையெல்லாம் படித்தால் பண்டிதனாகலாம் என்பது பழமொழி. அதற்காக கண்டதைத் தின்றால் உடல் குண்டாகுமே தவிர உடலுக்கு ஆரோக்கியம் தராது.





பொதுவாக உணவுமுறையைப் பொருத்தவரை சைவ உணவுவகைகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.காய்கறிகள், கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்ற விதைகள் அடங்கிய சைவ உணவுகளில் போதிய அளவிற்கு ஊட்டச்சத்துகள் கிடையாது என்ற கவலை இப்போது இல்லை. குறிப்பாக உடலுக்கு தேவையான புரோட்டீனை சைவ உணவுகள் மற்றும் காய்கறிகள் அளிக்கின்றன என்பது தெரிய வந்திருப்பதால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளே கூட வெஜிடேரியன் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள்.



சைவ உணவில் உடலில் ஏற்படும் நோய்களுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்களுக்கான சிகிச்சை இயல்பாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெஜிடேரியன் உணவு முறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு தாவரவகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்தல் நலம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய உணவு ஆய்வுக் கழகம் போன்ற சுகாதார அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.






சைவ உணவு முறையே ஒரு சில நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாகும் என்றும், உடலுக்கு தேவையான பலன்களை அளிக்கக்கூடிய சத்துக்கள் வெஜிடேரியன் உணவுகளில் இருக்கின்றன என்றும் அவை கூறுகின்றன. வெஜிடேரியன்களில் வேறுவேறு வகைகள் உண்டு. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள். இறைச்சி, மீன், கோழி போன்ற பறவைகளின் இறைச்சியையும் அறவே தவிர்ப்பவர்கள் ஒரு ரகம். சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் மீன், கோழி போன்ற ஒரு சிலவற்றை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.



சைவ உணவு முறையைக் கடைபிடிப்பவர்களைப் பொருத்த வரை தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் அடிப்படையில் உள்ளவர்களே அதிகம் எனலாம். எந்தவொரு அசைவ உணவுகளையும் சாப்பிடாதவர்கள் பலர். இறைச்சியை மட்டும் தவிர்ப்பவர்கள் சிலர் என்று செவன்த் டே அன்வென்டிஸ்ட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் சைவ உணவுமுறையைக் கொண்டிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டுள்ளனர். அதாவது அசைவத்தை முற்றிலும் தவிர்த்தோர் ஆரோக்கியமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்:
*
தாவர வகை உணவுகளை எடுத்துக் கொள்வோர் உடல் குண்டாவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். உடல் குண்டாக இருப்பதால் பல்வேறு வகை நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, சில வகை கேன்சர் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிகம். சில நேரங்களில் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாலோ அல்லது காய்கறிகளை அதிகம் உண்பதாலோ உடல் எடை தேவையான அளவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. கொழுப்புச் சத்து குறைவாக எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை குறைந்து காணப்படலாம். அதற்கேற்ப உடல் எடையை சீரான அளவில் வைக்கத் தேவையான ஆகாரங்களை எடுத்துக் கொள்தல் அவசியமாகிறது.


***


இருதய நோய்:

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும். அதே நேரத்தில் சைவ உணவினர் போதிய அளவிற்கு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்தல் அவசியம். கொழுப்பு அளவில் சுமார் 50 முதல் 100 சதவீதம் நார்ச்சத்துள்ள உணவுகளையும் உண்ணுதல் வேண்டும். தாவர உணவுகளில் தேவையான நார்ச்சத்துகள் இருப்பதால், அவை இருதய நோய்களை கட்டுப்படுத்துகின்றன. இருதயத்தின் ஆர்ட்டரி சுவர்களில் தேங்கும் கொழுப்புகளை தாவர வகை உணவுகள் அகற்றுகின்றன.

அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்பதால் சைவர்கள் டென்ஷன் ஆவது குறைகிறது. தவிர சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் சைவ உணவினருக்கு குறைவே.

என்றாலும் சைவ உணவு முறைகளைக் கொண்டிருப்போர் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஈடுகட்ட வேண்டும். புரோட்டீன், விட்டமின் டி மற்றும் பி 12, கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துக்களை உடலுக்கு போதுமான அளவில் வேறு வகையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன்மூலம் அவர்கள் அசைவ உணவுகளில் இருக்கும் அளவிலான சத்துக்களை சமன்படுத்தலாம்.

சைவத்திலேயே விதவிதமான உணவுகளை சாப்பிடுவதுடன் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். பால் பொருட்களைப் பொருத்தவரை குறைவான கொழும்பு கொண்டவையாக இருக்கட்டும்.மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்வை நாம் பெற வேண்டுமானால் வெஜிடேரியன் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவோம்.

***

நன்றி பாரதி.
http://barthee.wordpress.com/



***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment