நீரின் குணம் :
மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போகும். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவை இயிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று சலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்க்கும். கிணற்று சலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமூத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.
குளிர்ந்தநீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும். இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு ந்ல்லது. காய்ந்து ஆறிய நீரானதுபித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம்முதலிய நோய்கட்குச் சிறந்தது.
உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.
***
அன்னம் கஞ்சி இவைகளின் குணம்:
அரிசியுடன் முறைப்படி நீர் சேர்த்து கொஞ்சங்கூட கஞ்சியில்லாம்ல் வடித்தெடுத்த அன்னத்திற்கு ஒதனமென்று பெயர். இதுவே சாதாரண அன்னமாம். இதனால் விரணயோகம், நேத்திரரோகம், துர்பலம், தைல பாணத்தால் உண்டான தோஷம் முதலியன நீங்கும். தீபன முண்டாகும்.
ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு நீர் விட்டு கஞ்சியை வடிக்காமல் எடுத்த அன்னத்திற்கு விலேபி என்று பெயர். இது தேகத்திற்கு ஆரோக்கியம், பசி பாசனம் முதலியவைகளை உண்டாக்கி கிரகணி முதலியவைகளை போக்கும்.
ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பாகம் நீர் சேர்த்து சிறிது சாதம் தென்படும்படி காய்ச்சிய கஞ்சிக்கு பேயம் என்று பெயர். இது பசி, தாக்ம், ஆயாசம், துர்பலம், சுரம், வாதம் இவைகளை தணித்து பசிதீபனத்தை யுண்டாக்கும்.
ஒரு பங்கு அரிசியுடன் பதினான்கு பங்கு நீர் சேர்த்துக்கொஞ்சங்கூட அன்னம் தெரியாம்ல் சுத்த கஞ்சி சலம்போல் காய்ச்சிய கஞ்சிக்கு மண்டமென்று பெயர். இது தாகம், ஆயாசம், தோஷம் இவைகளை நீக்கும். தாதுவிருத்தி, தீபனம், வியர்வை இவைகளை யுண்டாக்கும். இது மிகவும் மெலிந்தவர்களுக்கும் அதிசார நோயினருக்கும் பயன்படும்.
***
தானியங்கள்:
பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும்.
பத்தியத்திற்குதவாது.
புழுங்கலரிசி :- இது பாலர்முதல் விருத்தர்வரை யாவருக்கும் நோயாளிகட்கும் பொருத்தமான
உணவாகும். பத்தியத்திற்காகும்.
கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமே
கத்தையும் நீக்கும். ஷயம் மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.
சோளம்:- ச்ச் தினவு, வீரணம், கரப்பான் முதலியன அதிகரிக்கும் நல்ல மருந்தும் கெடும் .
கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேதிக
ளுக்கு சிறந்த உணவாகும்.
கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தைதரும். சரீரத்தின்
வெப்பத்தைத்தணிக்கும் குளிர்ச்சி யென்பர்.
கடலை :- இது வயிற்றுவலி வயிற்றுப்புரம்,மந்தம், கிரகணி, மயக்கம், மூலவாயு முதலியவைகளை
உண்டாக்கும். மருந்தின் குணத்தைக்கெடுக்கும்.
உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். கபவாதம் இடுப்பிற்கு
பலம். வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்.
துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.
இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும்,
உதவும் என்க.
பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும் சீதளமென்பர்.
பட்டாணி :- இது நூரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத்தரும். ஆனால் வாய்வையும்,மந்தத்
தையும், உண்டாக்கும்.
மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தைத்தணிக்கும், மலத்தைப்பெருக்
கும்.
பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக்கட்டும், பசியைத்தணிக்கும். சுரம்
முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.
***
கீரைகள்
சிறு கீரை :- நீரைப்பிரிக்கும், மருந்தையும் விஷத்தையும் முறிக்கும், சிறிது உஷ்ணத்தை உண்டாக்கும்.
அறு கீரை :- இதனால் வாதமும் கபமும் மட்டாகும், மலம் இளகும், வீரியவிருத்தி முதலியவைக உண்டாக்கும்.
அரைக்கீரை: - இதனால் பித்தம் தணியும் , நீரை வரட்டும்.
அகத்திக் கீரை:- இதனால் பித்தம் தணியும் , மலமும் நீரும் போகும். மருந்தையும் விஷத்தையும் முறிக்குமென்க.
முருங்கைக் கீரை :- பித்தத்தைதணிக்கும். மலத்தை இளக்கும்.
புதியனா :- இதனால் அரோசகம்,வாந்தி, பசியின்மை நீக்கும், ஜீரணசக்தியுண்டாகும்.
கருவேப்பிலை :- இதனால் அரோசகம், பேதி,சுரம், பித்தம், பசி மந்தம் இவைகள் போம்.
கொத்தமல்லிகீரை :- இதனால் அரோசகம், பித்தாதிக்கம், போம், சுக்கிலம் பெருகும்.
துத்திக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், விரணத்தை ஆற்றும்.
சுக்கான்கீரை :- உஷ்ணத்தைதணிக்கும், ஜீரணசக்தியையும், இரத்தசக்தியையும் உண்டாக்கும்.
சிறுபசலைகீரை :- உஷ்ணத்தைதணிக்கும், கபத்தை விருத்திசெய்யும் புணர்ச்சியிச்சையை உண்டாக்கும்.
புளிச்சகீரை :- பித்தம் தணியும் , வீரியவிருத்தியாம்.
சோகிக்கீரை :- வாய்வையும், உதிரச்சிக்கலையும் போக்கி, ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.
மணலிக்கீரை :- இது வாத பித்த கப தோஷங்களை தணிப்பதுடன் கிருமிகளை மடியச்செய்யும் பத்தியத்திற்குதவும்.
புளியாரைக்கீரை :- இதனால் உஷ்ணமும், பித்தமும் சமனப்படும்
பொண்ணாங்காணிக்கீரை :- இதனால் உடலில் உஷ்ணம் தணியும்,கண்களுக்கு ஒலியும், உடலுக்கு பலமும் மேனியுமுண்டாகும்.
மணத்தக்காளிக்கீரை :- வெட்டையைத்தணிக்கும், வாய்ரணத்தை ஆற்றும். மலத்தை இளக்கும், நீரைப்பிரிக்கும்.
காசினிக்கீரை :- இது இரத்தத்தை சுத்தி செய்வதுடன், இரத்த விரித்தியையும் உண்டாக்கும், மலத்தையும் நீரையும் பிரிக்கும்.
வெந்தயக்கீரை :- இது வயிற்றுவலி, பசிமந்தம், வாதகோபம், உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல் முதலிவைகளையும் போக்கும்.
முள்ளங்கிக்கீரை :நீரைப்பெருக்கும்,பசிதீபனத்தையும்,ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.
முளைக்கீரை :- இவைகள் உஷ்ணத்தை தடுத்து நீரைப்பெருக்கும், சீதளமென்பர்.
****
"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment