**********
ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சொன்னார்,''நான் இருபத்தாறு ஆண்டுகளும் என் மனைவி இருபத்தி நான்கு ஆண்டுகளும் மகிழ்ச்சியாக இருந்தோம்.''நண்பர் கேட்டார்,''அதன் பின் என்னாயிற்று?''எழுத்தாளர் சொன்னார்,'அதன் பின் எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது.''
**********
நேர்முகத் தேர்வில் விற்பனை அதிகாரி கேட்டார்,''உங்களுக்கு விற்பனையில் முன் அனுபவம் இருக்கிறதா?''வந்தவர் சொன்னார்,''நிறைய அனுபவம் இருக்கிறது,சார்.சமீபத்தில் கூட என் வீடு ,கார்,என் மனைவியின் நகைகள்.நிலம் எல்லாவற்றையும் விற்றிருக்கிறேன்.''
**********
ஆசிரியை கேட்டார்,''தேர்வுத் தாளில் உன் பக்கத்தில் இருந்தவன் செய்த தவறும்,உன் தவறும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?அதற்கு என்ன காரணம்?''மாணவன் சொன்னான்,''இருவருக்கும் ஒரே ஆசிரியை தானே சொல்லிக் கொடுக்கிறார்?''
**********
ஒரு கல்லறை மீது எழுதப்பட்டிருந்தது,''இங்கு நேர்மையான வக்கீல்,ஜான் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.''ஒருவர் கேட்டார்,''ஒரே கல்லறையில் எப்படி மூன்று பேரை அடக்கம் செய்துள்ளார்கள்?''
**********
ஒருவர் விடுமுறைக்கு ஒரு கடற்கரை நகருக்கு செல்ல உத்தேசித்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்துவிட்டு,அதன் முகவரி கேட்டார்.மேனேஜர் சொன்னார்,''கடற்கரையிலிருந்து கல்லடி தூரத்தில் தான் எங்கள் ஹோட்டல் உள்ளது.''இவர் கேட்டார்,''அது சரி,அதை எப்படி அடையாளம் காண்பது?''கண்ணாடிகள் எல்லாம் கல்லடி பட்ட அடையாளம் தெரியும் ''என்று பதில் வந்தது.
**********
ஒரு நேர்முகத் தேர்வில்,''இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?''என்று கேட்கப்பட்டது.''அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,அவ்வளவு,''என்று பதில் வந்தது.அவர் தேர்வு செய்யப்பட்டார்.
**********
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment