நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்?
இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி குழந்தைகள் சிறுவர்கள் மட்டுமன்றி வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
*
இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20 வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
*
இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில் தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.
*
நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில் தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
*
மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.
*
தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.
*
ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
*
நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
*
நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
***
thanks திலீபன் செல்வகுமாரன்
***
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment