தேவையானவை:
கொத்தமல்லித் தழை : 1 கப்
புதினாத் தழை : 1 கப்
பசுமையான கருவேப்பிலை : 1 1/2 கப்
தூதுவளை இலை : 1 கப்
பிரண்டை : 1 கப்
இஞ்சி : 1 துண்டு
பூண்டு : 5 பல்
பச்சை மிளகாய் : 5
காய்ந்த மிளகாய் : 5
சிறிய வெங்காயம் : 10
தக்காளி : 1
புளி பேஸ்ட் : 3 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் : 150 மி
கடுகு, உளுந்து, பெருங்காயம் : தாளிப்புக்குத் தக்க
உப்பு : தேவைக்கேற்ப
முன்னேற்பாடுகள்
கொத்தமல்லி, புதினாத் தழைகளின் தண்டை நீக்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை இலையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். தூதுவளை இலையின் பின்பிறம் லேசான முள் இருக்கும். முள்ளை நீக்கி சுத்தம் செய்யவும். பிரண்டை, குச்சிபோல் இருக்கும். நார் நீக்கி, உள் இருக்கும் சதைப்பற்றை மட்டும் எடுத்து சுத்தம் செய்யவும். இஞ்சி, மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் இட்டு மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை
கடாயில் எணணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் இட்டுத் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் பச்சைத் துவையலை சேர்த்துச் சுருள வதக்கி ஆறியதும் உலர்ந்த ஜாடியில் பத்திரப் படுத்தவும்.
இதை, சோற்றில் கலந்து பிசைந்து சாப்பிடலாம். சாம்பார்/ரசம்/மோர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன். பிரிஜ்ஜில் வைத்து 15 நாட்களுக்குப் பயன் படுத்தலாம்.
***
பிரண்டை:
முன்னேற்பாடு சிறிது கடினமாக இருந்தாலும் உடலுக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடியது. கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு ஆகியன குளிர்ச்சி; இரத்த சுத்தரிப்பு, ஜீரண சக்தி அளிக்கக்கூடியது. கருவேப்பிலை கண்ணுக்கும் கருங்கூந்தலுக்கும் ஏற்றது. நரை பாதிப்பு இருக்காது. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பயன் தரும்.
ஜலதோஷம், கபம், தொண்டைவலிக்கு தூதுவளை மிகச்சிறந்த நிவாரணி. மூட்டுவலி, ஜீரணஉறுப்புக் கோளாறு, சுளுக்கு, அடிபட்ட வீக்கம் ஆகியவற்றிற்குப் பிரண்டை சிறந்தது.
***
தூதுவளை:
பிரண்டையும் தூதுவளையும் கிராமங்களில் எளிதாகக் கிடைக்கும். இவ்விரண்டும் இல்லாமலும் துவையல் செய்யலாம். புளி, காரம் அவரவர் சுவைக்குத் தகுந்தாற்போல் கூட-குறைய சேர்த்துக் கொள்ளலாம். இத்துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடும்பத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.
***
by-ஆர். நூர்ஜஹான் ரஹீம்
thanks நூர்ஜஹான்
***
"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment