குழந்தைகள் நோய்நொடியின்றி நலமுடன் வளர உணவில் காணப்படும் அல்லது சேர்க்கப்படும் வைட்டமின்கள் பெரிதும் உதவுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளும் தேவைக்கேற்ப உணவில் அடங்கியிறந்தால் அதை நாம் சமநிலை உணவு என அழைக்கின்றோம். நாம் அளிக்கும் உணவில் எல்லா வைட்டமின்களையுமே சேர்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு வைட்டமினாவது குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி அதனால் தடைப்படுகின்றது.
வைட்டமின்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். 1, நீரில் கரைபவை உதாரணம் பி, சி, பி. 2, எண்ணெயில் கரைபவை, உதாரணம் ஏ. டி. இ. கே. இவற்றில் எண்ணெயில் கரைவது தண்ணீரில் களரவது இல்லை. நீரில் களரவது எண்ணெயில் களரவது இல்லை.
இனி குழந்தைகளுக்கு தேவைப்படும் சில வைட்டமின்கள் பற்றி பார்க்கலாம்.
வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைகளுக்கு மாலைக்கண், ஒளியிழந்த கண், கண்ணில் சதை வளருதல், கருவிழி பாதிப்பு மற்றும் உடலில் தோல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எல்லா வகை கீரை வகைகள் முருங்கைக்காய், காரட், பச்சை மிளகாய், பப்பாளி, செவ்வாழை, ஆரஞ்சு, பலாப்பழம், சப்போட்டா பழம், மாம்பழம், தக்காளிப் பழம், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், நண்டு, மீன், தாய்ப்பால், வெண்ணெய், நெய், சிவப்பு பனை எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ உள்ளது.
குழந்தை வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகவும் தேவையானதாகும். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் வைட்டமின் ஏ போதுமான அளவிற்கு கிடைக்கும். முதல் 3 திங்களுக்குப் பின் தாய்ப்பால் கொடுப்பது தடைப்பட்டால் வைட்டமின் ஏ கொண்ட சொட்டு மருந்துகளில் ஏதாவதொன்றை பசும்பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
வைட்டமின் பி, வைட்டமின் பியில் சில பிரிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஒருந்கிணைந்தே உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. தானிய வகைகள், ஈஸ்ட் பால் முட்டை பன்று இறைச்சி, மீன் வேர்க்கடலை, தீட்டப்படாத அரிசி போன்றவற்றில் இது அதிகம் உள்ளது. இனி வைட்டமின் பியின் வகைகள் பற்றியும் அவை குறைந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பார்க்கலாம்.
வைட்டநின் பி1, இதற்கு "தையமின்" என்று பெயர். இதன் மூலம் உண்ணும் உணவிலுள்ள மாவுச் சத்து செரிக்கப்பட்டு அது குளுக்கோளாசாக மாற்றப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் அளிக்கப்படுகின்றது. இந்த வைட்டமினை உட்கொண்ட ஒரு சில நிமிடங்களிலேயே இதனை மூளை ஈரல் இதயம் போன்ற பகுதிகளில் காணமுடிகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் பி 1 குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் குறை நோய்க்கு பெரிபெரி என்று பெயர். குழந்தைக்கு மூன்று திங்கள் காலத்திலிருந்து தாய்ப்பாலுடன் அல்லது மற்ற பாலுடன் தானிய உணவும் சேர்த்தளிக்க விட்டால் இக்குறை ஏற்படுகின்றது. இந்நோய் கண்டால் குழந்தையின் உடல் முழுதும் வீக்கம் ஏற்படும். தசைகள் வளர்ச்சியின்றி வலுவிழந்து காணப்படும். உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் வலுவின்மையால் காசநோய் போன்ற பல நோய்கள் வரக் கூடும்.
வைட்டமின் பி 2. இதற்கு "ரிபாப்ளேவின்" என்று பெயர். இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது. குழந்தையின் வாயின் இரு ஓரங்களிலும் வெடிப்புகளுடன் கூடிய காயங்கள் உருவாகும். நாக்கு சிவந்து வழுவழுப்புடன் வெடிப்புக்கள் தோன்றும். எனவே உணவுகளை உட்கொள்ள குழந்தை சிரமப்படும். நாக்கில் மட்டுமல்லாது இந்த வைட்டமின் குறைவால் குடலிலும் இவ்வாறான காயம் ஏற்பட்டு உணவு உட்கொள்ள இயலாமையும் வயிற்றுப் போக்கும் ஏற்படக் கூடும்.
வைட்டபின் பி 2 இதில் ரிபாப்பிளேவினுடன் நியாசின் என்ற மற்றொரு சத்தும் சேர்ந்து காணப்படுகின்றது. இதை நிக்கோடினிக் அமிலம் என்றும் எழைப்பதுண்டு. இந்த வைட்டமின் குறைவால் பெலாக்ரா என்ற நோய் உண்டாகின்றது. அதனால் சூரிய ஒளிபடுகின்ற இடங்களில் எல்லாம் தோல் கருமையுற்று உலர்ந்து பளபளப்பு மங்கிவிடும். குழந்தையின் நாக்கு தடித்து வீங்கி சிவந்து காணப்படும்.
***
நன்றி http://www.darulsafa.com
***
"வாழ்க வளமுடன்"
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment