Sunday, October 24, 2010

எடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்


1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)


2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

    காதல் என்பது வயசு கொழுப்பு


3. ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.


4. சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?


5.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 

1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு  3.இரவு சாப்பாடு.


6.மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் "இனிஷியல் உன்னுது,பேபி என்னுது."


 

7. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
     நனைந்தபின்பு ஜலதோஷம்.


8. அன்பர்களே,100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது,ஏன் தெரியுமா? கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பாக்க முடியும்.


9.என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்.


10.என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,  ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.


11.தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.

அப்போ   பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.


12.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

13.நட்புக்கும்,காதலுக்கும்  என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment