Sunday, October 24, 2010

சிரிக்கலாம் வாங்க !

ஒரு வகுப்பறையில்...

ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு
மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர்
ஆரிசியர்: வெரி குட் மரியா...

ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு

மாணவன்: மரியா...! டீச்சார்..

ஆசிரிய‌ர்: ????..!!!

----------------------------------------------------------

கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே

ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE)  இல்லாமல் போடசொல்லி...

----------------------------------------------------------

வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?

ஜோசப்: அது வந்து H I J K L M N O

வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ

ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

----------------------------------------------------------

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

----------------------------------------------------------

முதலாளி வேலைகாரரைப்பார்த்து
டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

----------------------------------------------------------

தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல்
அட்டெண்டர்: எதுக்கு சார்
ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும்

----------------------------------------------------------

ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு

பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ்

டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்?



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment