Sunday, December 5, 2010

உங்க நிறம் எந்த நிறம்

நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.

04.03.1981= 0+4+0+3+1+9+8+1

=26 (2+6)

=8

8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)

உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.

அதன் படி....

1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.

2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.

3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.

4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.

5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.

6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.

7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.

8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.

9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்

தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

அந்தஸ்து

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Friday, December 3, 2010

சிரிப்பு வருது: ஜோக்ஸ் - 2

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.



ஜோதிடர்:    உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஸ்டமர் : எது பல்லா !?




பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?

ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.



பர் : சர்வர்..என்னுடைய சூப்பில் ஒரு ஈ விழுந்து கிடக்கிறது.
 ர்வர் : கவலைப்படாதீங்க சார். ஈ ரொம்பல்லாம் சூப் குடிக்காது.



ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?
பர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.
ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.
பர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.
ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..


ண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!. 



னைவி:  ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...'' 
 ணவன்:  ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...'


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, December 1, 2010

சான்றோர் சொல்

மகாத்மா காந்தி.

ஒருவன் உண்மையே பேசவேண்டும் .மனதிற்க்கு இன்பம் அளிப்பதையே பேச வேண்டும்.ஆனால்,மனத்திற்குப் பிடிக்காத உண்மையைப் பேசக்கூடாது.

-மனுஸ்மிருதி.

உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது.சேவைதான் வெளிப்படுத்தும்.

-மகாத்மா காந்தி.

இஸ்லாம் என்ற வார்த்தைக்கே ''அமைதி'' என்று தான் பொருள்.அமைதி என்பது அகிம்சை. இஸ்லாமின் அடையாளம்'' வாள்'' அன்று.

-மகாத்மா காந்தி.

உன் சொந்த முயர்ச்சியால் சம்பாதிக்கும் செல்வம் சிறிதளவாயினும் அதைக்கொன்டு
மனத்திருப்தி பெறு.

-ஸ்ரீ ஆதிசங்கர்ர்.

நான் பயப்படாதவன் போல் என்னை எண்ணிக்கொண்ட காரணத்தால்.படிப்படியாக
என்னிடத்திலிருந்து பயம் ஒழிந்து விட்டது.

-யோகானந்தன் கணேசன் .( எப்படியும் திட்ட போறீங்க )

உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net