ஜோதிடர்: உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். கஸ்டமர் : எது பல்லா !?
பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?
ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.
நபர் : சர்வர்..என்னுடைய சூப்பில் ஒரு ஈ விழுந்து கிடக்கிறது.
சர்வர் : கவலைப்படாதீங்க சார். ஈ ரொம்பல்லாம் சூப் குடிக்காது.
ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?
நபர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.
ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.
நபர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.
ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..
நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.
மனைவி: ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
கணவன்: ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...'
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment