Wednesday, December 1, 2010

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 3


மரணம் நிச்சயம். இதை மறுதலிக்க ரணம் அதிகமாகும்.
-குரு.


கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம். பணிவு அமைதியில் மட்டுமே வரும். அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்.
-குரு.


நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் ஆசைப்படும் விஷயங்களெல்லாம் சோதனை முயற்சியாகத்தான் இருக்கின்றன.
-குரு.


மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை.மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
-குரு.


எப்போது ஒரு விஷயத்தை மற்றவருக்காக நம்முள் திணித்துக் கொள்கிறோமோ அது நல்லதா கெட்டதா என்கிற பார்வையெல்லாம் இனி வரவே வராது.
-குரு.


தனிமையில் இருக்கத் தெரிவது மிகப்பெரிய வரம்.
-குரு.


குரு என்பவர் ஒவ்வொரு சீடனுக்கும் வழங்குகின்ற முதல் விஷயம் அன்புதான்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது அன்புதான்.
-குரு.


செயலில் கர்வம் ஏற்படுகிறபோதுதான், இதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், தடுமாற்றமும் கோபமும் ஏற்படுகின்றன.
-குரு.


காமம் என்பது மிகப்பெரிய தபஸ்விகளையும் கவிழ்த்துவிடும் வல்லமையுடையது.
-பட்டாபிஷேகம்.


நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.
-உத்தமன்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, November 30, 2010

பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்...

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.

தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்...

* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.

* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.

* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.

* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.

- இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ்



ஜோக்ஸ்


பன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. 3Share எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!

===============================================
என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?

என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.

எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி 
===============================================
உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.

உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.
===============================================
ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க:
உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா. உங்க மனைவி
அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்
===============================================
கண்டக்டர்: எங்க போகணும்?
டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.
===============================================
செல்வா: நண்பா எனக்கு சாப்பிட பிடிக்கலை, தூங்க பிடிக்கலை எனக்கு காதல் வந்திடுச்சோ
சௌந்தர்: சனியனே செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு போய் படி
=============================
ஜில் தண்ணி: ஊர்ல பஸ் டிக்கெட், டிரைன் டிக்கட், சினிமா டிக்கெட் வச்சிருக்குறவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க. ஒரே ஒரு ஹால் டிக்கெட்ட வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. அய்யய்யையோ
===============================================
மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்.
ஆனால் study லீவ் என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். படிக்கவும் முடியாமா என்ஜாய் பண்ணவும் முடியாம ... அந்த அவஸ்தை அனுபவிச்சு பாத்தாதான் தெரியும்
===============================================
டெரர் அவர்களின் இதயத்தையும் உடைக்கவோ காயப்படுத்தவோ வேண்டாம். ஏன்னா அவருக்கு இதயம் ஒண்ணுதான. வேணும்னா அவரோட எலும்ப உடைங்க. அதுதான் 206 இருக்கே.
===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:

தப்பிச்சன்டா
சாமீ!!!
===============================================
பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, November 29, 2010

பிட்டு - 31


1. உன் பக்கத்துல உக்காந்து பரீட்சை எழுதின மனோகரைப் பார்த்து நீ காப்பி அடிச்சிருக்கேங்கறதை வாத்தியார் எப்படிக் கண்டுபிடிச்சார்?

பரீட்சை பேப்பர்ல கடைசியா நன்றி - மனோகர்னு எழுதித் தொலைச்சுட்டேன்.
==========
2. விநாடி வினா நிகழ்ச்சில அந்தப் பொண்ணை ஏன் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தீங்க ?

ஸாரிங்க, குவிஸ் புரோக்ராம்னு தெரியாது, கிஸ் புரோக்ராம்னு நினைச்சுட்டேன்.
==========
3. என்னடா ? போஸ்ட்மேன் வேலை கிடைச்சதுக்கு இவ்வளவு சந்தோஷப்படறே ?

பின்னே ? இனி எந்த ஃபிகரைப் பார்த்து லெட்டர் குடுத்தாலும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.
==========
4. சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.

இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.
==========
5. அந்த ஆட்டோவுல கல்யாணத்துக்கு வயது 31-ன்னு எழுதியிருக்கே, எப்படி ?

அந்த ஆட்டோக்காரரோட பேரு கல்யாணம். அவருக்க வயசு முப்பத்தி ஒண்ணு
==========
6. பதவிப் பிரமாணம் எடுக்க தலைவர் ரொம்ப கூச்சப்படுறாரே .. ஏன் ?

எதையும் யாருக்கும் தெரியாம எடுத்துதான் பழக்கமாம்
==========
7. மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?

பரவாயில்லை .. .. எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே
==========

இன்றைய மெகா ஜோக்:

8. கணவன்: சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க .. ..

மனைவி: எதுக்காம் .. .. ?

கண்வன்: நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இரவில் தனிமையில் இருந்தால் திக்...திக்...

இருட்டிற்குள் கொஞ்ச தூரம் செல்லவும் திக்...திக்... காரணம் உள்ளூர ஊறிவிட்ட பயம் தான். பேய் என்றொரு விசித்திரம். இருக்கிறதா, இல்லையா? என்று விடை தெரியாததால் ஒட்டிக் கொண்ட பயம் அது.

உருவம் உண்டு, உருவம் கிடையாது. இருட்டுக்குள் இருக்கும், மரத்தில் ஆடும். மனிதனைப் போல உருவமிருக்கும். அதன் வழியில் குறுக்கிட்டால் ஒரே அடியில் உயிரைக் குடித்துவிடும். இப்படி ஆளாளுக்கு சொல்லி வைக்க, தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம்.

***

பட்டிக்காட்டான், பகுத்தறிவாளன், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் பேய் பற்றிய சிந்தனையில் வேறுபடுகிறார்கள். பேய் பற்றிய குறிப்புகள் ஆன்மிக நூல்களிலும் காணப்படுகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேய் பற்றி பேசப்பட்டு வருகிறது.

மனோதத்துவ விஞ்ஞானிகள் (1890-ல்) சொசைட்டி பார் சைஜிக்கல் ரிசர்ச் (எஸ்.பி.ஆர்.) என்ற அமைப்பை தொடங்கி ஆவிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து நேரடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவி ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன.

***

ஆவி உலக ஆராய்ச்சியின் முன்னோடியாக கருதப்படும் ஜி.என்.எம்.டைரல் என்பவர் 4 வகை பேய்கள் உண்டு என்கிறார். 1.உயிரோடு இருப்பவர்களின் ஆவி. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர் முன் தோன்றுவது. 2. ஆபத்து நேர ஆவிகள். நமக்கு நன்கு தெரிந்தவர், அவருக்கு ஆபத்தான தருணத்தில் (இறப்பு அல்லது விபத்தின்போது) நம் முன் தோன்றுவது. 3. இயல்பான ஆவிகள். இறந்த ஒருவருடைய ஆவி எப்போதாவது தோன்றுவது. 4. நீண்டகால ஆவிகள். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகளில் பல ஆண்டுகளாக வசிப்பவை இந்த வகை ஆவிகள்.

***

ஆவி உலகில் மீடியமாக செயல்படும் பெண்கள் ஏராளம். ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் முக்கியமான பெண் ஆய்வாளர் பாய்ன். ஆவிகளில் நல்லவை, கெட்டவை, சாது, முரடானவை உண்டு என்கிறார் இவர். அவை மனிதர்களை தாக்கும், உதவும், கண்டுகொள்ளாமலும் செல்லும் என்பது இவருடைய கருத்து. பேய் அடித்து யாரும் சாவதில்லை. பேயைப் பார்த்த பயத்தில் செத்தவர்கள்தான் ஏராளம் என்கிறார் பாய்ன். பேயைப் பார்த்து பயப்படாமல், `ச்சீ போய்விடு' என்று அலட்சியப்படுத்தினால் அவை போய்விடும் என்று பேய் விரட்ட டிப்ஸ் தருகிறார் இவர்.

***

வீட்லிகேரிங்டன் ஆவி ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர். "உடலில் உள்ள செல்கள் போலவே மனதுக்கும் செல்கள் உண்டு. அவை சைகான்கள் எனப்படும். நாம் ஆழமாக ஒரு விஷயத்தை எண்ணும்போது சைகான்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உருவமாகத் தோன்றும். அதுதான் ஆவி'' என்று இவர் விளக்கம் அளித்தார். இது ஒரு புதுமையான விளக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எல்லோரது எண்ணங்களும் அப்படி உருவத்தை ஏற்படுத்தும் என்பதை மெய்ப்பிக்க முடியாததால் அது ஒரு தியரியாக மட்டுமே இருந்து வருகிறது.

***

ஆவி ஆய்வாளர் மையர்ஸ் இன்னொரு முறையில் விளக்கம் தருகிறார். டெலிபதி (தொலைவில் உணர்தல்) எண்ணங்கள்தான் ஆவிக்கு காரணம் என்கிறார் இவர். ஒருவர் ஆபத்தான நேரத்தில் யாரையாவது பார்க்கவோ, உதவி கோரவோ நினைத்தால் அவரது எண்ணங்கள் `டெலிபதி' முறையில் சம்பந்தப்பட்டவரை சென்றடையும். அப்போது அவர் முன்பு பாதிக்கப்பட்டவரின் உருவமும் தோன்றும். அதுதான் ஆவி என்கிறார் மையர்ஸ். இதற்கு அவர் சில உதாரணங்களைக் கூறி விளக்கினார். இந்தக் கருத்துக்களை விஞ்ஞானிகள் ஓரளவு ஏற்றுக்கொள்கிறார்கள்.

***

ஆவிகளுக்கு உடல் இல்லாமல் எப்படி உருவம் ஏற்படும்? தோன்றும் முன்பாக அவை எங்கே குடியிருக்கின்றன? என்பவை பேய் மறுப்பாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்விகள்.

இறந்தவரின் ஆன்மா ஆவியாக உருப்பெற்று அலைகிறது என்றால் இறப்பின் மர்மங்களை அவை மனிதனுக்கு விளக்க முடியுமே? ஒரு இடத்தில் இருக்கும் எந்த மனிதரையும் கவனிக்காமல் தான் பாட்டுக்கு கடந்து செல்கிறதே அவற்றுக்கு புத்திசாலித்தனம் கிடையாதா? உருவமற்ற அவை உடை அணிந்து தோன்றுமாமே? அவற்றுக்கு எதற்கு உடை? அவை எப்படி அணியும்? இவையும் அவர்களின் கேள்விகள்.

***

ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள், எல்லா கூற்றுகளையுமே மறுக்கிறார்கள். எல்லாம் பிரமை என்கிறார்கள். வழிவழியாக கடத்தப்படும் கற்பனைகள் பிரமை உருவத்தை தோற்றுவிக்கக்கூடும் அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பது அவர்களின் கருத்து. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆவி ஆராய்ச்சி சூடுபிடித்தது. நவீன ஸ்கேனர்கள், கதிர்வீச்சுக் கேமரா, பேய்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட `ஸ்பைடர்' கருவி என அறிவியல் நவீனங்கள் கொண்டு ஆய்வாளர்கள் ஆவிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இதுவரை ஆவிகள் சிக்கவில்லை. அவை எழுப்பும் பீதியும் குறையவில்லை.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net