-குரு.
கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம். பணிவு அமைதியில் மட்டுமே வரும். அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்.
-குரு.
நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் ஆசைப்படும் விஷயங்களெல்லாம் சோதனை முயற்சியாகத்தான் இருக்கின்றன.
-குரு.
மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை.மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
-குரு.
எப்போது ஒரு விஷயத்தை மற்றவருக்காக நம்முள் திணித்துக் கொள்கிறோமோ அது நல்லதா கெட்டதா என்கிற பார்வையெல்லாம் இனி வரவே வராது.
-குரு.
தனிமையில் இருக்கத் தெரிவது மிகப்பெரிய வரம்.
-குரு.
குரு என்பவர் ஒவ்வொரு சீடனுக்கும் வழங்குகின்ற முதல் விஷயம் அன்புதான்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது அன்புதான்.
-குரு.
செயலில் கர்வம் ஏற்படுகிறபோதுதான், இதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், தடுமாற்றமும் கோபமும் ஏற்படுகின்றன.
-குரு.
காமம் என்பது மிகப்பெரிய தபஸ்விகளையும் கவிழ்த்துவிடும் வல்லமையுடையது.
-பட்டாபிஷேகம்.
நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.
-உத்தமன்.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உண்மையான, தேவையான, கூற்றுக்களுக்கு நான் எப்பொழுதுமே அடிமையாகி விடுவேன். அது போல உங்களுடைய இந்த பதிவிற்கு இன்று நான் அடிமை.
ReplyDeleteமுடிந்தால் இங்கும் சென்று பாருங்கள்.
http://rupsrajni.blogspot.com/