Tuesday, December 7, 2010

மாரடைப்பை தடுப்பது எப்படி?

இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான புகைபிடித்தல் போன்ற காரணங்களை தவிர்த்து,  அத்தகைய மருத்துவ காரணங்கள் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு) இருப்பின் அதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான சில வாழ்வு முறைகளை அமைத்து, அதை தவறாமல் கடைபிடித்து வருவதே மாரடைப்பை தடுக்க சிறந்த வழி.
ஆரோக்கியமான வாழ்வு முறை:
கொழுப்புச் சத்து குறைந்த உணவு உட்கொள்ளுதல். உணவில் சரியான அளவு பழவகைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளுதல். உப்பின் அளவை குறைத்தல். இத்தகைய உணவு முறைகளின் மூலம் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து போன்ற மருத்துவ காரணங்களையும் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.
சரியான உடல் எடையை பேணுதல்:
இது உங்கள் உயரத்தை பொறுத்தது. இதைக் கண்டறிய, உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதிலிருந்து 100ஐ கழித்தால் வரும் எண்ணின் அளவிலான, "கிலோ' அளவே உங்கள் சரியான எடை. உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ., என்றால், உங்களின் சரியான எடை (100 கழித்து) 60 கிலோ இருக்க வேண்டும்.
இடுப்பின் சுற்றளவு, ஆண்களுக்கு 90 செ.மீ.,க்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீ.,க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இடுப்பின் அளவு இதற்கு மிகையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பின்னாளில் மாரடைப்போ, பக்கவாத நோயோ வரும் சாத்தியக் கூறுகள் இருமடங்காகின்றன. இதன் பொருள் என்னவென்றால், உடலின் மற்ற பாகங்களில் தேங்கும் கொழுப்பை விட, இடுப்பில் படியும் கொழுப்பு, உடலின் உள்ளுறுப்புகளின் கொழுப்பு சதவீதத்தை பிரதிபலிக்கிறது. - டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment