Saturday, November 13, 2010

பொறாமைகொள்ளாதோ!?

உன் மதிமுகத்தில்
நான் மதி மயங்கி
முத்தமிடும் போதினிலே
மங்கை முகம் சிவக்ககண்டு-அந்த
மருதாணியும் பொறாமைகொள்ளாதோ!?

உன்னிடையில் நானொரு
விடை தேடும்போதினிலே
உன் கண்ணாளன் என்மீது
உன்னுடைகளும் பொறாமைகொள்ளாதோ!?

எத்தனைச்சிகரங்களைத் தொட்டபோதும்
ஏக்கம் தீராத மேகங்கள்-உன்
மார்பு கச்சைகளின்மீது பொறாமைகொள்ளாதோ!?

சிற்றிடை தழுவி
சின்ன பாதத்தில் விழும்-உன்
சேலையருவி கண்டு-அந்த
மலையருவி மனதிற்குள் பொறாமைகொள்ளாதோ!?

மேகங்களையெல்லாம்
களவாடிக்கொண்ட-உன்
கார்கூந்தல் கண்டு-அந்த
வானமும் பொறாமைகொள்ளாதோ!?

வாச மலர்களில் இல்லாத
வசந்தத்தை-உன்
வாலிப வனப்பில் கண்டு-அந்த
வண்டுகளும் பொறாமைகொள்ளாதோ!?

மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?

கண்ணே!
உன்னழகைக்கண்டு ஊரார்
கண்பட்டுவிடுமென்றே-என்
கண்ணுக்குள்ளே உனை வைத்தேனடி!
அடிப்பெண்ணே! இப்போது
எனக்கே என்மீது பொறாமையடி!


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment